பண்பலை வானொலியின் நிழல் தொடரும் தமிழனின் வாழ்க்கை:
தொலைக்காட்சி வந்தப் பிறகு மாறிய சராசரி தமிழனின் பொழுதுபோக்கு மீண்டும் வானொலியில் வந்து சேரும் என்று சுலபமாக யாரும் கணித்திருக்க முடியாது. புத்தகங்களைப் போலவே வானொலியோடு வளர்ந்தவள் நான்.படிக்கும் போது இலங்கை தமிழ் வானொலி மீது எனக்கு பிரத்தேயகக காதல் இருந்தது. என் படிப்பு நேரங்களை நான் பகுதிபடுத்திக் கொள்வதே அந்த வானொலியின் நிகழ்ச்சிகளின் நேரத்தைக் கொண்டே.
அப்பாவுக்கு இலங்கை அப்‍எஸ்டேட் தான். அவர்களின் அட்சரம் பிசகாத தமிழ் என்னை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.சரியா ஏழாவது வகுப்பு முழு ஆண்டு விடுமுறையில் எனக்கே எனக்கென்று
வாழ்க்கையை ஜெயித்திருக்கக் கூடிய ஒரு பெண் தன்னை ஜெயிக்க முடியாமல் போனதால் அதனிடம் காயம்பட்டாள் என உன்னுடைய tombstone எழுதப்பட்டு விடக்கூடாது.= இது நேற்று மெயிலில் எனக்கு வந்த நான் மிகவும் நேசிக்கும், மதிப்பவர் எனக்காக எழுதிய வரி.நிஜமான அன்பு, அக்கறை, பரிவுடன் இதை வாசிக்கும் போது தான் எனக்கு ஒரே சமயம் எப்படி மனசுல ச்ந்தோஷமும் கண்ணுல ஈரமும் வரும்னு தெரிஞ்சிது.

எங்க அப்பா அடிக்கடி சொல்வார் = காலுக்கு ஷூ இல்லைனு கவலப்படுறது கால் இல்லாத ஒருத்தரைப் பார்க்குற வரைக்கும தான்னு.ஒரு தும்மல் நம்மை இம்சிக்கிறதுனா ஒரு தடவை ஏதாச்சும் பொதுமருத்துவமனைக்கு போயிட்டு வந்தா நம்ம கஷ்டம் ஒண்ணுமே இல்லாம ஆக்கிடும்.


வாழ்க்கையில் நான் நிறைய இழந்திருக்கிறேன். அல்லது வாழ்க்கை எனக்குப் பிடித்த விஷயங்களை என்னிடமிருந்து பறித்திருக்கிறது.22வது வயதில் ஒரு தமிழ் பத்திரிக்கையின் ஆசிரியராகும் வாய்ப்பு வந்தது. அதற்காகவே பால்யூ வீட்டுக்கு வந்தார்.ந‌டந்துட்டே பேசுறேன்னு சொல்லிட்டு அப்பவே 25,000 ரூபா சம்பளம்னு சொன்னார்.எனக்கு அவருக்கு அன்றய சூழல்ல என்ன பதில் சொல்ல முடியும்னு தெரியும். அன்னைக்கு வீட்டுல வத்தக் குழம்பும் அவரைக்காய் பொரியலும் வைத்திருந்தேன். சாப்பிடுங்கனு சொன்னோன பிகு பண்ணிக்காம கொஞ்சம் நல்லெண்ணெய் விடு வத்தக் குழம்புலனு வீட்டு ஆள் மாதிரி சாப்பிட்டது இப்ப நினைச்சா கூட சந்தோஷமாருக்கு.போய் லெட்ட்ர் போடுறோம்னு சொல்ற மாப்பிள்ளை வீட்டுக்காரங்க மாதிரி கொஞ்சம் யோசிச்சு சொல்றேன்னு அவர் கிட்ட சொல்லியாச்சு. அப்புறமா வீட்டுல பொது குழு போட்டு குழந்தையைக் காரணம் காட்டி வேலை வேணாம்னு சொல்லிடலாம்னு முடிவாச்சு.
இந்த நிலையை விட்டு வெளி வர நான் விலையாய் கொடுத்தது‍ உறவுகளை.முதலில் தடுமாற்றங்களுடன் ஆரம்பித்த இந்த பயணத்தை இப்ப நானே முன்னே வந்து மதிப்பீடுகிற தூரத்துக்கு வந்து விட்டேன்.
நாலு வருஷமாய் இந்த உற்வை நாம் இழந்து விட்டோமேனு மனசுள்ள பூட்டிப் பூட்டிப் வச்ச ஒரு கனம் மேலே சொன்ன வரிகள் சுமந்த மினன‌ஞ‌சலில் கரைந்துப் போகிறது.

வருத்தம்தான். கோபமெல்லாம் கிடையாது. கோபப்படமுடியாத குழந்தைகளில் நீயும் ஒன்று‍ இப்படி இடையூறிய வரிகள் , அத்னூடே பரவிய ஒரு ஆத்மார்த்தமான ப்ரியம் என்னை நீண்ட நாள் கழித்து அழ வைதது என்பதை நான் வெட்கமில்லாமல் சொல்கிறேன்.

வாழ்க்கையை ஜெயித்திருக்கக் கூடிய ஒரு பெண் தன்னை ஜெயிக்க முடியாமல் போனதால் அதனிடம் காயம்பட்டாள் என உன்னுடைய tombstone எழுதப்பட்டு விடக்கூடாது‍=

ஆனால் இங்கே நான் தோற்றுப் போனது அன்பால்..
பதிவுகள் ப்ளாக்ல போடலாம்ங்கிற உத்வேகத்தைக் கொடுத்தது பரிசல்காரன் ப்ளாக தான். அப்ப அது பத்தி நிறைய விஷயங்களில்‍ டெம்ப்லேட், அது இதுலலாம் உதவியது விஜயலக்ஷ்மண்.சரி. பிள்ளையார் சுழி போட்டாச்சு.ப்ளாக்ல என்னலாம் எழுதலாம்னோன ராஜவேல் மொக்கையா எழுதுக்கானான். அப்பதான் நிறைய பேர் வாசிப்பாங்கனான். வழக்கமான உயிரில் விழுந்த சிக்கல் அது இதுனுலாம் எழுதிடாதனு அவன் மறைமுகமா எச்சரிசசது புரிஞ்சா கூட பிறவி புத்தி போகுமா ?

கடைசிப் ப்க்கம் தொலைந்த டைரினு ஒரு ப்க்கம் எழுதிட்டு போகலாம்னு மனசத் தேத்திக்கிட்டேன்.வ்ழக்கமா பேசுறப்ப கொஞ்சம் வெளிப்படுற குசும்ப வச்சி மத்தத சமாளிச்சிக்கலாம்னு ஒரு கிராப் மனசுக்குள்ள வரைஞ்சாச்சு.

அப்புற‌மா த‌மிழ்ம‌ன‌ம்ல‌ எப்ப‌டி சேர்க்க‌னு ப‌ரிச‌ல்கார‌ன் கிருஷ்ணா உத‌வி செய்தார். த‌மிழ்வெளில‌ ம‌றுப‌டி நில‌வ‌ன் சேர்த்து விட்டார்.ந‌ண்ப‌ர்க‌ள் உடையான் ப‌டைக்கு அஞ்சான்.

க‌டைசில‌ கிருஷ்ணா போன்ல‌ சொல்ல‌ சொல்ல‌ த‌மிழ் ம‌ன‌ம் க‌ருவிப்ப‌ட்டைல‌ ‌‍பேர் ந‌ல்லாருக்கு இல்லையா?சேர்த்தாச்சு.
இப்ப‌ பாருங்க‌ . த‌மிழ் ம‌ன‌ம் பேஜ்ல‌ உங்க‌ ப‌திவு வ‌ரும். முத‌ல் 20க்குள்ள‌ முத‌ல் ப‌க்க‌த்துல‌ தெரியும். அப்புற‌மா சைடுல‌ ம‌றுமொழி தெரியும்னார். ச‌ரினு சொல்லிட்டு ராத்திரி ஒரு ப‌த்து ம‌ணிக்கு யாராச்சும்
யாராச்சும் பின்னோட்டம் போட்டிருக்காங்களானு பார்த்தேன் .குச் நஹி. சரினு ஒரு ரெண்டு மணிக்கு முழிப்பு வந்தப்போ சிஸ்டம் ஆன் பண்ணி பார்த்தேன். புள்ள உச்சா போயிட்டானு பார்க்குற மாதிரி.
அப்பவும் எதுமில்லை.

காலைலயும் பார்த்தாச்சு. இல்லை.இல்லவே இல்ல. பரிசல்காரன்ட்ட மெசேஜ் பண்ணி ‍ஒண்ணுமே வரலனேன். அழக்கூடாதுனு சொன்னார் வடிவேலு பாணில. அட‍= அழுது அழுது எங்க வீட்டு போர்வை நனைஞ்சிப் போச்சேனு சொன்னேன்.

அரசியல்ல இதெல்லாம் சகஜம்மப்பா சாமினேன்.
நீங்க எல்லாத்தையும் லைட்டா எடுத்துக்கிறீங்க. நல்ல ஸ்பிரிட்னார்.
அடிங்க. மூஞ்சில மட்டும் அடிக்காதீங்க. பர்சனாலிட்டி போயிறும்னு தான் சொல்லவும் வேண்டியிருக்கு.
இந்த பதிவுக்கு பெரும்பாலும் உதவிய வடிவேலுக்கு மானசீகமான நன்றி.
வடிவேல் சத்தியமா மறுமொழி போட மாட்டார்

மைக் டெஸ்டிங்..

வெள்ளி, மார்ச் 27, 2009 | 1 Comments

மைக் டெஸ்டிங்.. 1 ... 2... 3..
பதிவுகள் ப்ளாக்ல போடலாம்ங்கிற உத்வேகத்தைக் கொடுத்தது பரிசல்காரன் ப்ளாக தான். அப்ப அது பத்தி நிறைய விஷயங்களில்‍ டெம்ப்லேட், அது இதுலலாம் உதவியது விஜயலக்ஷ்மண்.சரி. பிள்ளையார் சுழி போட்டாச்சு.ப்ளாக்ல என்னலாம் எழுதலாம்னோன ராஜவேல் மொக்கையா எழுதுக்கானான். அப்பதான் நிறைய பேர் வாசிப்பாங்கனான். வழக்கமான உயிரில் விழுந்த சிக்கல் அது இதுனுலாம் எழுதிடாதனு அவன் மறைமுகமா எச்சரிசசது புரிஞ்சா கூட பிறவி புத்தி போகுமா ?

கடைசிப் ப்க்கம் தொலைந்த டைரினு ஒரு ப்க்கம் எழுதிட்டு போகலாம்னு மனசத் தேத்திக்கிட்டேன்.வ்ழக்கமா பேசுறப்ப கொஞ்சம் வெளிப்படுற குசும்ப வச்சி மத்தத சமாளிச்சிக்கலாம்னு ஒரு கிராப் மனசுக்குள்ள வரைஞ்சாச்சு.

அப்புற‌மா த‌மிழ்ம‌ன‌ம்ல‌ எப்ப‌டி சேர்க்க‌னு ப‌ரிச‌ல்கார‌ன் கிருஷ்ணா உத‌வி செய்தார். த‌மிழ்வெளில‌ ம‌றுப‌டி நில‌வ‌ன் சேர்த்து விட்டார்.ந‌ண்ப‌ர்க‌ள் உடையான் ப‌டைக்கு அஞ்சான்.

க‌டைசில‌ கிருஷ்ணா போன்ல‌ சொல்ல‌ சொல்ல‌ த‌மிழ் ம‌ன‌ம் க‌ருவிப்ப‌ட்டைல‌ ‌‍பேர் ந‌ல்லாருக்கு இல்லையா?சேர்த்தாச்சு.
இப்ப‌ பாருங்க‌ . த‌மிழ் ம‌ன‌ம் பேஜ்ல‌ உங்க‌ ப‌திவு வ‌ரும். முத‌ல் 20க்குள்ள‌ முத‌ல் ப‌க்க‌த்துல‌ தெரியும். அப்புற‌மா சைடுல‌ ம‌றுமொழி தெரியும்னார். ச‌ரினு சொல்லிட்டு ராத்திரி ஒரு ப‌த்து ம‌ணிக்கு யாராச்சும்
யாராச்சும் பின்னோட்டம் போட்டிருக்காங்களானு பார்த்தேன் .குச் நஹி. சரினு ஒரு ரெண்டு மணிக்கு முழிப்பு வந்தப்போ சிஸ்டம் ஆன் பண்ணி பார்த்தேன். புள்ள உச்சா போயிட்டானு பார்க்குற மாதிரி.
அப்பவும் எதுமில்லை.

காலைலயும் பார்த்தாச்சு. இல்லை.இல்லவே இல்ல. பரிசல்காரன்ட்ட மெசேஜ் பண்ணி ‍ஒண்ணுமே வரலனேன். அழக்கூடாதுனு சொன்னார் வடிவேலு பாணில. அட‍= அழுது அழுது எங்க வீட்டு போர்வை நனைஞ்சிப் போச்சேனு சொன்னேன்.

அரசியல்ல இதெல்லாம் சகஜம்மப்பா சாமினேன்.
நீங்க எல்லாத்தையும் லைட்டா எடுத்துக்கிறீங்க. நல்ல ஸ்பிரிட்னார்.
அடிங்க. மூஞ்சில மட்டும் அடிக்காதீங்க. பர்சனாலிட்டி போயிறும்னு தான் சொல்லவும் வேண்டியிருக்கு.
இந்த பதிவுக்கு பெரும்பாலும் உதவிய வடிவேலுக்கு மானசீகமான நன்றி.
வடிவேல் சத்தியமா மறுமொழி போட மாட்டார்

கடவுள்

புதன், மார்ச் 25, 2009 | 0 Comments

கடவுள் : கடவுள் இருக்கார் இல்லைனு இன்னைக்கும் நிறைய விவாதம் கருத்தியல்ரீதியாக நட‌ந்துட்டே தான் இருக்கு. சினிமால சாமி கதாபாத்திரங்கள் நீண்ட காலமாக வெற்றி பெறும் விஷயங்களாக இருக்கிறது.திருவிளையாடல் பார்த்தப் பிற்கு சாமினா சிவாஜி மாதிரி இருப்பார்னு சின்ன வயசுல நினைச்சிருக்கேன்.என் ஆத்துமாவேனு சொல்லிட்டு ஜெபம் பண்ணுனு சொல்லிக் கொடுக்கப்பட்டு வள்ர்ந்தேன். வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகள், வலிகள், துரோகங்கள் எல்லாவற்றுக்கும் கடவுள்ட்ட கேள்வி கேக்காம இருக்க முடியல.நான் நீதிபதி சீட்லயும் கடவுள் கீழேயும் நின்னு கேள்வி கேட்கிறாற் போல் கனவுலாம் எனக்கு வந்திருக்கு.எமிலி டிக்கின்சன் சொல்றது தான் இந்த இடத்துல பொருந்தும்‍=கடவுள் என் நண்பன்,எதிரி,துரோகி.
kkkk

வெளி

புதன், மார்ச் 25, 2009 | 0 Comments

வாழ்க்கை : ரயில் பயணங்களில் வாங்கின முறுக்குக்கான சில்லறையை வாங்க ரயிலைத் துரத்தும் வியாபாரி போலத் தான் வாழ்க்கை எனக்கு முகம் காட்டுகிறது.ரயில் வேகம் அதிகமானால் நஷ்டமும், கை நீட்டப்படும் சில்லறையை பெற முடிந்தால் லாபமுமாக வாழ்க்கை நகர்ந்திருக்கிறது. சில நேரம் தவறி தண்டவாளங்களில் சிதறும் சில்லறைகளைத் தேடுவதிலும் கழிகிறது வாழ்க்கை. ஒரு அழிரப்பர் கொண்டு என் வாழ்வை முதலிலிருந்து அழித்து எழுத ஆசை.எது எப்படி என்றாலும் என்னை உருவாக்கிய அப்பா‍ தூக்கததில் கால் வலித்தால் விழித்து கால் பிடித்து விட்ட அப்பா, தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருகி ஓடினப் போது சைக்கிளில் வைத்து கூட்டிட்டுப் போன அப்பா.எனக்கு பாட்டனி பரீட்சை என்றால் ராததிரி பூராவும் நோட்ஸ் எழுதிக் கொடுத்த அப்பா அப்பவும் வேணும்.
நண்பர்கள்:
எல்லா கால‌க‌ட்ட‌ங்க‌ளிலும் ந‌ல்ல‌ ந‌ட்பே என்னை உருவாக்கியிருக்கிற‌து. க‌ல்லூரில‌ ப‌டித்த‌ கால‌க‌ட்ட‌த்துல் "மாறுத‌லா"ங்கிற‌ கையெழுத்துப் ப‌த்திரிக்கையை நான் அமுதா,கோம‌தி,சிவ‌ப்ப்ரியானலாம் ந‌ட‌த்தினோம். அப்ப‌ தான் சாவிக்கு ‍ பொழுது விடியுமென்று எஙிற‌ க‌தையை அனுப்பிய‌து. அது திரும்பி வ‌ந்தாலும்‍ ந‌ல்லா எழுதுறேங்கிற க‌டித‌த்தை இணைச்சி நான் நிறைய‌ எழுத‌ ப‌யிற்சி கொடுத்த‌ ச‌த்தீஷ் அண்ணா. ந‌ல்ல‌ க‌தைக‌ள் இவைன்னு அடையாள‌ம் காட்டிய‌ ஷ‌க்தி தொட‌ர் ஜெக‌ன்.ஒவ்வொரு தொகுப்புக்கும் முன்னுரை கொடுத்த‌ பிர‌ப‌ஞ்ச‌ன். ஒவ்வொரு எழுத்திலும் துணை நின்ற‌ மால‌ன்.இர‌வின் வான‌த்தில் ஒவ்வொரு திக்கும் மிளிரும் ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளுக்குப் பேர் இருக்கிற‌தோ‍ இல்லையோ என் வீட்டுக்கு மேல் ஒளிரும் ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளில் இவ‌ர்க‌ளின் பெய‌ர் இருக்கும்.உற்றுப் பாருங்க‌ள்.
தனிமை
மின்விசிறி ஓடும் ஓசை பிரம்மாண்டமாய் கேட்டிருக்கிறதா உங்களுக்கு? தாள் தரையில் விழும் ஒலி உங்கள் காத்களை மூட வைத்திருக்கிறதா? தனிமை ஒரு பாம்பின் இருப்பு போல என்னை பல தருணங்களில் மிரட்சி அடைய வைத்திருக்கிறது.மனிதர்கள் சுமக்கும் வலி மிகுந்த சிலுவை‍ தனிமையாக மட்டுமே இரூக்கும் என்று வாழ்க்கை எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது.ஒற்றை தேனீர் கோப்பை எந்த மாலைவேளையையும் அழகாக்கப் போவதில்லை.கடந்து போகும் மரங்கள்,காற்று மட்டுமே மிச்சமிருக்கும் பேருந்து பயணங்களைக் கூட அழகாக்குது பக்கத்து இருக்கை குழந்தை.
புத்தகங்கள் :
அம்புலிமாமாவில் ஆரம்பித்த பயணம் . பாலகுமாரன் வண்ணதாசன், எமிலி டிக்கின்சன்,வண்ணநிலவன்,அசோகமித்திரன்,எஸ்.ரா வரை இன்னும் ஒரு முடிவு பெறாத சாலையின் இருப்பாய் நீள்கிறது.வெகுஜ‌ன‌ ப‌த்திரிக்கைக‌ளில் எழுதுவ‌தை விம‌ர்சிக்கும் இல‌க்கிய‌வாதிக‌ளைப் ப‌ரிதாப‌த்தோடு பார்க்க‌வும், இல‌க்கிய‌ அர‌சிய‌லில் இருந்து வில‌கி இருக்க‌வும் சொல்லிக் கொடுத்த‌தும் ,ந‌ல்ல‌ எழுத்துக்க‌ள் எங்கிருந்தாலும் தாக‌முடைய‌வ‌ன் த‌ண்ணீரை மொட‌க் மொட‌க்கென்று குடிப்ப‌து போல் கிர‌கித்துக் கொள்ள‌வும், வாழ்க்கையில் அனுப‌வ‌ங்க‌ளைத் த‌விர‌ உண்மையான ஆசான் வேறேதுவும் இல்லை என்று உணர்ந்து கொள்ளவும் புத்தகங்களே இன்னும் உதவி செய்கின்றன . நெல்லை நகரத்து கீழ ரத வீதில பேலபூரி சாப்பிட்டு கைத்துடைக்கும் தாளில் கூட யாரோவின் வாழ்க்கை கசக்கபடலாம்,இல்லையா?
காத்திருப்பு:
வாழ்க்கை ந‌ம்மை எதெற்கெல்லாமோ காத்திருக்க‌ வைக்கிற‌து. பேருந்து நிலைய‌த்தில், பிர‌ச‌வ‌ அறையில்,ப‌ரீட்சை முடிவுக்காய், காத‌லியின் ப‌திலுக்காய்.. இன்னும் எத்த‌னை எத்த‌னையோ.. காத்திருத‌ல்க‌ள் எல்லாமே தேடுத‌ல்க‌ளா ? இருக்க‌லாம். இல்லாம‌லும் போக‌லாம்.க‌ட‌வுளின் வ‌ருகைக்காக‌ த‌வ‌ம் ப‌ண்ணினார்க‌ள் முனிவ‌ர்க‌ள் என்ற‌ க‌தை கேட்டு வ‌ள‌ர்ந்த‌வ‌ர்க‌ள் நாம். இழ‌ப்புக‌ளைப் புன்ன‌கையாய் மாற்றும் யுக்தியை என‌க்கு சொல்லிக் கொடுத்த‌து தேட‌ல் தான். தேட‌ல் ந‌ம்பிக்கைக‌ளோடே பெரும்பாலும் இருந்தாலும் ,காத்திருப்புக‌ள் தேட‌லா என்று தெரிய‌ல‌னாலும் காத்திருப்புகளில் எப்பவும் மிச்சமிருக்கிறது தவற விட்ட கடைசி பேருந்தின் தடம்.
இசை :அப்பாவின் கிடார் இசையோடு வளர்ந்தவள் நான்.பாட்டுப் போட்டியின் முதல் நாள் குட்டு வாங்கி வாங்கி பாட்டு படிச்சிட்டுப் போய் பரிசெல்லாம் பள்ளிக்கூட நாட்களில் வாங்கிட்டு வந்ததுண்டு. அப்புறமா இலங்கை வானொலி கேக்கனே ஒரு ட்ரான்சிஸ்டர் அப்பா வாங்கிக் கொடுத்தார்‍‍‍= ஏழாவது வகுப்புல. படிக்கிறப்போலருந்து குளிக்கிறப்போ கூட அதை கங்காரு மாதிரி சுமந்துட்டு திரிஞ்சிருக்கேன்.25 பைசாவுக்கு பாட்டுப் புத்தகம் வாங்கி வச்சிக்கிட்டு வீட்ல யாரும் இல்லாதப்போ சத்தமா பாடிருக்கேன்.(பக்கத்து வீட்டுக்காரங்க பாவம்னு இப்ப புரியுது.)ராஜாவோட ப்ளோ‍அப் ஒண்ண என் அறைல மாட்டி வச்சிக்கிட்டு ஹவ் டூ நேம் இட், நத்திங் பட் தெ வின்ட் பத்திலாம் பேசிருக்கேன். மனசுக்கு நெருக்கமா பல பாடல்கள் இருக்கு. சிலது கண்ணுல நீர கொண்டு வரும்.ஸ்வரங்கள்ல இருக்கிற மாதிரி இசை இதயத்துலயம் இருக்கு இலலையா
வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல திருநெல்வேலிகாரங்களப் பத்தி ஒரு பதிவு படித்தேன். உண்மை தான்.எங்களுக்கு எங்க ஊரப் பத்தி பெருமை அதிகம் தான். சென்னைல இருந்தப்போ ஹாஸ்டல்ல தண்ணி வராதப்போ குறுக்குத்துறைல முங்கி முங்கி குளிச்சதும்,திருவைகுண்டம் ஆத்துல சித்தி கூட சின்னப்புள்ளல குளிச்சதும் தான் ஞாபகத்துக்கு வரும்.இன்னிக்கும் இருட்டுக்கடைக்கு முன்னால் கொஞ்சமும் லஜ்ஜை இல்லாம வரிசையாய் நிக்கிற கூட்டம் என்ன சொல்லுது? மனுஷ மனச விட நாக்கு முக்கியமானதுனா? ஆனா கூட, வழுக்க வழுக்க வாழை இலைல சூட அல்வாவ இலை லேசா கறுப்பா நிறம் மாற சாப்பிடுற ருசி இருக்கே....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...
அதே மாதிரி தான் எங்க ஊர் சொதியும். சில் நேரம் நான் வைக்கிறப்ப அது சதியாயிடும்.இதே சொதியை அப்பா இலங்கைல ஸ்டுயூனு சொல்லுவாங்கனு சொல்லுவார். அதுல கறிமசாலாலாம் சேர்த்திருப்பாங்க. அம்மா நெஞ்செலும்பு போட்டு ஸ்டியூ வச்சா நாள் பூரா சாப்பிட்டுட்டே இருக்கலாம். அதென்ன சொற்றொடர்னு தெரில‍ நாள் பூரா சாப்பிட்டுட்டே இருக்கலாம்னு. வேற வேலயே பாக்க வேணாமா? யாராச்சும் சாப்பாட்டு ராமன் உருவாக்கிய சொற்றொடராக இருக்கலாம்.
இதே வ‌ல்ல‌நாடு தாமிர‌ப‌ர‌ணி ரொம்ப‌ ஆழ‌மில்லாம‌ நிதான‌மா குளிக்க‌ தோதாருக்கும்.காரையாருல‌ காணும் பொங்க‌லுக்குப் போனா அங்க‌ பொங்கி ஓடுற‌ ஆத்துல‌ ப‌ய‌ந்து ப‌ய‌ந்து த‌லையை ந‌னைக்க‌துக்கு அக்காமார்லாம் ப‌ய‌ப்ப‌டுவாங்க‌.சில‌ தைரிய‌மான‌ , க‌ண‌வ‌ன்மார்க‌ளை அத‌ட்டி உருட்டி வைக்கும் அம்ம‌ணிக‌ள் ஆத்தோர‌மா உக்காந்து செம்புல‌ கோரி கோரி குளிப்பாங்க‌.
இப்ப‌டி தான் இருட்டுக்க‌டை அல்வா ப‌த்தி எழுத‌ ஆர‌ம்பிச்சு க‌டைசில‌ தாமிர‌ப‌ர‌ணில‌ குளிக்கிற‌த‌ ப‌த்தி விலாவாரியா எழுதிட்டு இருக்கேன். நேத்தும் இப்ப‌டி தான் பிர‌ப‌ஞ்ச‌ன் ப‌த்தி எழுத‌ ஆர‌ம்பிச்சு மால‌ன் ப‌த்தி எழுதி முடிச்சேன்.வாழ்க்கை போல‌வே எங்கோ ஆர‌ம்பிச்சு எங்கோ முடியுது எல்லாமே!
கடைசி பக்கம் தொலைந்த டைரி:மனசு சில நேரங்களில் தீவு மாதிரி ஆகி விடுகிறது. மூன்று பக்கங்களிலும் கனவுகள் சூழ்ந்திருக்க, ஒரு பக்கம் மட்டும் யதார்த்தம் நிகழும் இடம் மனமாகத் தான் இருக்கிறது. இவளின் கண்கள் வெறுமையாய் இருக்கிறது.இழப்புகள் மட்டும் வாழ்க்கை இல்லை தான். பின் ஏன் இழப்புகளே வாழ்க்கையாகி விடுகிறது.உனக்கு கூட உன் விடயங்களைப் பதிவு செய்யத் தான் அதிகம் பிடிக்கிறது.
கடைசி பக்கம் ஏன் இந்த டைரி தொலைந்து போகப் போகிறதுனு நீ யோசித்திருக்கியா எப்பவாச்சும். சத்தியமாக இல்லை. உனக்கு அதை விட தாமிரபரணி குளியல்,இருட்டுக்கடை அல்வாலாம் முக்கியம். அது சரி‍ இப்பல்லாம் எழவு வீட்ல கூட ஆர்டர் எடுத்து சாப்பிடுராஙக, இலலையா?
இவளின் கண்கள் ஈரமாகின்றன. அப்பா தெரியுமா உனக்கு‍ நான் படிக்கிறேன்னு அவர் நோட்ஸ் எழுதுவார்.அப்பாவுக்கு என்னைப் ப்ற்றி அதிக பெருமை உண்டு.அப்பா கூட ராயல் டாக்கீஸ்லயும்,சென்ட்ரலயும் பார்த்த படம்லாம் ம்றக்காது.அத‌ ப‌த்தி சாப்பிடுற‌ப்ப‌ அக்குவேறு ஆணிவேறா விம‌ர்ச‌ன‌ம் ப‌ண்ணுவோம். அடுத்த‌ நிமிட‌த்து வாழ்க்கைல‌ என்ன‌ ந‌ட‌க்க‌ போகுதுனு யாருக்குத் தெரியும்?
ச‌மாதான‌புர‌ம் முக்குல‌ ஒரு இனிப்புக் க‌டை முன்ன‌ உண்டு, உன‌க்கு தெரியுமா?அங்க‌ மைசூர்பாகு என‌க்குப் பிடிக்கும்னு அப்பா சைக்கிள்ல‌ போய் வாங்கிட்டு வ‌ருவார்.
ஒரு வாட்டி அம்மா தாத்தா யார்ட்ட‌யோ ப‌த்தாயிர‌ம் ரூவா க‌ட‌ன் வாங்கி திருப்பித் த‌ர‌ல‌னு வீட்ல‌ த‌னியாருக்கிற‌ப்ப‌ வ‌ந்து கேட்டாங‌க‌. யாரும் இல்ல‌னு சொன்னா கூட‌ போகாம‌ உக்காந்து பேசிட்டே இருந்தாங‌க‌. ராபின்ச‌ன் அண்ண‌ன் அந்த‌ வ‌ழியா வ‌ந்த‌ப்ப் த‌ற்செய‌லா என்ன‌டா கூட்ட‌மா இருக்குனு வ‌ந்து இவ‌ளை கூட்டிட்டு அத‌தை வீட்டுல‌ கொண்டு போய் விட்டாங்க‌. அப்புற‌மா அப்பா தாத்தாவோட‌ க‌ட‌ன்லாம் க்ட்டுன‌தும், ராபின்ச‌ன் அண்ண‌ணுக்கு க‌ல்யாண‌ம் ஆகி பொண்டாட்டி பிடிக்க‌ல‌னு த‌ள்ளி வ‌ச்ச‌தும், கொஞ்ச‌ வ‌ருஷ‌ம் க‌ழிச்சு ஒரு ஆக்சிட‌ண்டுல‌ இற‌ந்து போன‌தும் அடுத்த‌டுத்து ந‌ட‌ந்த‌து. தீவின் மூன்றுப் ப‌க்க‌மும் அடுக்க‌டுக்காய் க‌ட‌ல் இருப்ப‌து போல்...

வடக்கு வாசல் http://www.vadakkuvaasal.com

ஞாயிறு, மார்ச் 22, 2009 | 0 Comments

இந்திக்குத் தமிழ் வழங்கும் நூறு சிறுகதைகள்
மதிப்புரை
இந்திக்குத் தமிழ் வழங்கும் நூறு சிறுகதைகள்
முனைவர் எச்.பாலசுப்பிரமணியம்
பீஸ்வீன் சதாப்தி கீ தமிழ் கஹானி
(இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைகள்)
மொழியாக்கம் : முனைவர் வெ.பத்மாவதி
வெளியீடு : நவயுக பாரதி,
36/1, 14_வது குறுக்குத் தெரு,
திருமகள் நகர், பீளமேடு புதூர், கோவை_641 004.
விலை முறையே : ரூ. 120/_; 120/_; 130/_; 100-/_; 110/_

பொறிஇயல், தொழில் நுட்பம், நூற்பாலைகள், உயர்கல்வி, ஆன்மீகம் என்று பல திறப்பட்ட துறைகளில் முன்னேற்றம் கண்டு முன்னோடியாக விளங்கும் கோவை நகருக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், மொழியாக்கத் துறையில் முனைந்து தரமான நூறு தமிழ்ச் சிறுகதைகளை ஐந்து தொகுதிகளிலாக இந்திக்குக் கொணர்ந்துள்ள முனைவர் வெ.பத்மாவதி உள்ளபடியே சாதனை புரிந்துள்ளார். மானவாரியாக அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பொறுக்கி எடுத்த நூறு கதைகளல்ல இவை; தமக்குப் பிடித்தமான ஒரு சில எழுத்தாளர்களின் பல கதைகளுமல்ல.
இருபதாம் நூற்றாண்டின் இருபதுகளிலிருந்து தொடங்கி நீள நெடுகப் பயணித்து, இரண்டாயிரம் வரை வெளிவந்த தமிழ்ச் சிறுகதைகளிலிருந்து, திறனய்வு நோக்குடன் துல்லியமாகத் தேர்ந்தெடுத்த நூறு கதைகள். ஐந்து தனித்தனித் தொகுதிகளாக நூறு தமிழ்க் கதாசிரியர்களை இவர் ஒருசேர இந்திக்கு அறிமுகப் படுத்தியுள்ளது இதுவரையிலும் வரலாறு காணாத சாதனை. இருபதுகளின் பாரதியார், வ.வே.சு.அய்யர், அ.மாதவையா தொடங்கி இரண்டாயிரமாம் ஆண்டின் விழி.பா.இதய வேந்தன், லெட்சுமணப்பெருமாள், ர.நடராசன் வரையிலும் மூன்று தலைமுறைகளைச் சார்ந்த நூறு சிறுகதை எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளின் வாயிலாக இதன் மூலம் இந்தி உலகுக்கு அறிமுகமாகியுள்ளனர்.
ஓர் இலக்கியப் பிரதி இணைப்பு மொழியான இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு விட்டால், அதனை பிற இந்திய மொழிகளுக்கு எளிதாகக் கொண்டு செல்ல இயலும். பழக்க _ வழக்கங்கள், பண்டிகை _ திருவிழாக்கள், பூஜை _ புனஸ்காரங்கள், நாட்டார் கதை _ பழமொழிகள், நம்பிக்கை _ விலக்குகள் போன்ற பண்பாட்டுக் கூறுகளில் இந்திய மொழிகளிடையே பரவலான ஒற்றுமைகள் இருந்து வருவதால் பரஸ்பரப் பரிமாற்றம் சேதாரமின்றிச் செவ்வையாக நடைபெற இயலும். ஆங்கிலத்தை ஊடகமாகக் கொண்டு இந்தியமொழிப் பிரதிகளை மொழி பெயர்க்கும்' அன்பர்கள் தலையைச் சொறிந்து கொண்டு நிற்கும் போது இந்திய மொழிகளிடையே நேரடி மொழியாக்கம் செய்பவர்கள் பீடுநடை போடக் காணலாம்.
இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் தமிழ்ப் பத்திரிகைகளில் மராத்தி, இந்தி, வங்காள மொழிகளிலிருந்து நயமான பல சிறுகதைகளும் புதினங்களும் மொழியாக்கம் செய்யப்பட்டு பிரசுரமாயின; சில நூல் வடிவிலும் வெளி வந்தன. இவை அனைத்துமே நேரடி மொழியாக்கம் என்பது இதன் சிறப்பு அம்சம் த.நா.குமாரசாமி, கா.., ரா.விழி.நாதன் போன்ற தரமான மொழியாக்கச் செம்மல்களின் கைவண்ணத்தால், தாகூரும், காண்டேகரும், பிரேம் சந்தும் தமிழக வீதிகளில் உலாவந்தனர்; இல்லங்களில் உரையாடினர். தமிழிலிருந்தும் ஒரு சில படைப்புகள் பிற மொழிகளுக்குச் சென்றன. தமிழகத்தில் மட்டுமல்ல நாடெங்கிலுமுள்ள பல்வேறு மொழிகளிடையே சுமுகமான இலக்கியப் பரிமாற்றம் நிகழ்ந்து வந்தது. யார் செய்த தீவினையோ, மொழிவாரி மாநிலங்களின் அமைப்புக்குப் பின்னர், நாமனைவருமே சன்னல்களையும் கதவுகளையும் பிறமொழி வாடை நுழையாதபடி இழுத்துச் சார்த்திக் கொண்டோம். பரஸ்பர உறவுக்கும், நல்லெண்ணத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, வெறுப்பும் பகையும் சந்தேகப் பார்வையும் வலுக்கலாயிற்று. இந்திய மக்கள் என்ற உணர்வு போய் மொழி வழியாகப் பிரிந்து நின்றோம்.
மொழிகளிடையே போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் சாகித்திய அகாதமி, நேஷனல் புக் டிரஸ்ட் போன்ற மைய அரசு நிறுவனங்கள் திட்டமிட்டுச் செயலாற்றிய போதிலும், அவை வெளியிட்ட மொழி பெயர்ப்பு நூல்கள் உரிய வாசகர்களைச் சென்றடைய வழிவகை செய்யப் படவில்லை. விமர்சகமோ, மொழியாக்கத்தை இரண்டாம் தரப்படைப்பு என்று நினைத்தோ, அன்றி வேறெந்தக் காரணத்தினலோ இவற்றைக் கண்டு கொள்ள வில்லை. எழுத்தாளர்கள் தங்கள் மொழிவட்டத்திலேயே வளைய வந்தனர். பிற மாநிலங்களில் என்ன நடக்கிறது. இலக்கியத்தின் புதிய செல்நெறிகளை பிறமொழி எழுத்தாளர்கள் எப்படிக் கையாளுகிறார்கள் என்பதைப் பற்றி அறிய அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை.
தாராள மயங்கிளினலோ, கணினி _ மின்னஞ்சல்கள் செய்யும் நவீன விந்தையினலோ அன்றி யார் செய்த தவத்தினலோ சாளரங்கள் தாமாகவே திறந்து கொண்டன. இலக்கிய உலகில் ஒரு புதிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. பல்வேறு மொழிக் குரல்கள் இப்போது அந்நியமாகத் தெரிவதில்லை. தமிழகத்தில் மொழியாக்கத்துக்கெனவே வெளிவரும் காலாண்டிதழ் திசை எட்டும்' எட்டுத் திக்கிலிருந்தும் கலைச் செல்வங்களைக் கொணர்ந்திங்கு சேர்க்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக நெய்வேலி அருகே குறிஞ்சிப்பாடியிலிருந்து வருகிறது இந்த இதழ். வடக்கு வாசல் இதழிலும் பல சிறந்த மொழி பெயர்ப்பு சிறுகதைகள் வெளிவந்துள்ளன.
தமிழ்மொழியைச் செம்மொழியாக அறிவித்த பின்னர் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையும் செவ்வியல் தமிழினைப் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்வதில் ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளது. பிறமொழி வல்லுநர்களின் ஆலோசனை உடன் சங்க இலக்கியங் களையும் பிற நல்ல படைப்புகளையும் இந்திக்கும் பிற இந்திய மொழிகளுக்கும் மொழிமாற்றம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொண்டதைத் தொடர்ந்து, இருபதாம் நூற்றாண்டின் தரம் மிக்கச் சிறுகதைகளை இந்தியில் அறிமுகப் படுத்தும் பொறுப்பினை முனைவர் வெ.பத்மாவதி ஏற்றுக் கொண்டார்.
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைகளின் வளர்ச்சிப் பாதையில் பயணித்து, கதைகளின் பொமைச் சிறப்புகளின் அடிப்படையில் ஐந்து காலகட்டங்களாகப் பகுத்து, ஒவ்வொரு காலகட்டத்தின் செல் நெறிகளுக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் இருபது கதாசிரியர்களையும் அவர்களின் ஒவ்வொரு படைப்பையும் தேர்ந்தெடுப்பதில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வி.அரசு துணை புரிந்துள்ளார்.
முதற்கால கட்டம் (1930_1950) ஐரோப்பியச் சிறுகதைகளைத் தழுவியும், சமஸ்கிருத மரபு மற்றும் புராணங்களிலிருந்து கதைக் கருவை உள்வாங்கியும் புனையப்பட்ட கதைகள். ஒருபுறம் ஜனரஞ்சகப் போக்கு மேலோங்கி நிற்க, புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, ந.பிச்சமூர்த்தி, வ.ரா. போன்றவர்கள் புதிய பாதையை வகுத்தனர்.
இரண்டாம் காலகட்டம் (1950_65) இடது சாரிக் கருத்துகளின் தாக்கம் கொண்ட சிறுகதைகள் அரங்கேறின. இந்தப் பின்னணியில் இரண்டாம் உலகப் போருக்குப் பின் சோவியத் யூனியன் மற்றும் சீனத்திலிருந்து தோன்றி ஆசியாவெங்கிலும் பரவிய சிந்தனைகள் தமிழ்ச் சிறுகதையிலும் பிரதிபலித்தன. பாத்திரப் படைப்பிலும், கதை மாந்தர்களின் மனப்பாங்குகளைச் சித்தரிப்பதிலும் புதிய உத்திகள் கையாளப்பட்டன. தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், கிருஷ்ணன் நம்பி, சுந்தர ராமசாமி ஆகியோர் இக்காலத்தில் சிறுகதையுலகில் தடம் பதித்தனர்.
மூன்றாம் காலகட்டம் (1965_1980) சிறுகதையின் களம் நகரங்களிலிருந்து கிராமப் புறங்களுக்கு மாறியது. கிராம வாழ்க்கையின் சித்தரிப்புக்கு ஏற்ப, மொழிநடையிலும் மாற்றம் ஏற்பட்டது. இலக்கிய நடைக்குப் பதிலாக பேச்சு வழக்குகள் அப்படியே பதிவாயின. இக்கால கட்டத்தின் முக்கியமான படைப்பாளிகள் ஜனரஞ்சகப் பத்திரிகைகளை விடுவித்து, சிற்றிதழ்களிலேயே தமது படைப்புகளை வெளியிட்டனர். நனவோடை உத்திகளுடன் பெண்ணியக் குரலும் பதிவானது. அம்பை, நாஞ்சில் நாடன், வண்ண நிலவன், மேலாண்மை பொன்னுசாமி முக்கியமான படைப்பாளிகள்.
நான்காம் கட்டம் (1980_1990) இலத்தீன் அமெரிக்காவின் கொரில்லாப் போர், ஆப்பிரிக்க மக்களின் கருப்பர் இலக்கியம் மற்றும் இலங்கைத் தமிழ் மக்களின் போராட்டம் ஆகியவற்றின் தாக்கத்தைக் காண்கிறோம். முந்தைய கால கட்டங்களில் ஏதேனும் ஒரு சிந்தனையோட்டம் அடித்தளமாக இருந்தது. அதற்கு மாறாக, இக்கால கட்டத்தில் ஒவ்வொரு படைப்பாளியும் அவரவருக்கான தனித்தன்மையை வகுத்துக் கொள்வதில் முனைப்பாகச் செயல்பட்டனர். பெண்ணியத்துடன் தலித்தியக் கதைகளும் முக்கியத்துவம் பெற்றன. சோ.தருமன், திலீப் குமார், தமிழ்ச் செல்வன், களந்தை பீர் முகமது, காவேரி ஆகிய எழுத்தாளர்களைக் குறிப்பிடலாம்.
ஐந்தாம் கட்டம் (1990_2000) சமூகத்தில் நசுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் வகையில் தலித்தியம், பெண்ணியம் சார்ந்த கதைகள் மேலொங்கின. சோவியத் யூனியன் பிளவுண்டதைக் கண்ட மிரட்சி எழுத்தாளர்களின் பலதரப்பட்ட எதிர் வினைகளை விளைவித்தது. சோஷலிஸத் திலிருந்து மோக பங்கம் ஏற்பட்ட போதிலும் பன்னட்டு முதலாளியத்தை அடிப்படையாகக் கொண்ட உலக மயமாதலை ஏற்க முடியாத மனநிலை. வகுப்பு வாதத்தின் விஷமம் மற்றொரு புறம். ம.இராஜேந்திரன், தோப்பில் முகமது மீரான், தமயந்தி, இரா.முருகன், ப.வா.செல்லதுரை, உமாமகேஸ்வரி ஆகியோர் குறிப்பிடத் தகுந்த படைப் பாளிகள்.
ஐந்து தொகுதிகளிலும் தொடராக இணைந்துள்ள வளர்ச்சிக் கட்டங்கள் மூலமாக பிறமொழி அறிஞர்கள் தமிழ்ச் சிறுகதை வரலாற்றினை ஒட்டு மொத்தமாக அறிந்து கொள்ள இயலும். இது தவிர, இந்தியச் சிறுகதை வளர்ச்சியுடன் தமிழ்க் கதைகளின் போக்குகளை ஒப்பிட்டு இந்தி பிரசாரசபா முதுகலைப் பட்டப்படிப்பு பேராசிரியை டாக்டர் நிர்மலா எஸ்.மௌரியா ஐந்து தொகுதிகளிலும் முன்னுரை வழங்கியுள்ளது பயனுள்ளதாகத் தெரிகிறது.
இத்தனை கதைகளையும் மொழியாக்கம் செய்ததுடன் நில்லாமல், வெ.பத்மாவதி ஒவ்வொரு தொகுதியிலும் வெளிவந்த கதைகளின் சிறப்பு அம்சங்களைச் சுருக்கமாத் தொகுத்தளித்துள்ளது பாராட்டிற்குரியது. அத்துடன் அவர் தமிழ் எழுத்தாளர் பற்றிய சுருக்கக் குறிப்புகளையும் இணைத்திருந்தால் அது பிறமொழியினருக்கு மேலும் பயன் தருவதாக அமைந்திருக்கும். இதை மட்டுமே ஒரு குறை போல எடுத்துக் கூறத்தோன்றுகிறது. மற்றப்படி அட்டைப்பட வடிவமைப்பு முதல் கட்டமைப்பு, உள்ளடக்கம் எல்லாமே சிறப்பாக உள்ளன. கலை வண்ணம் மிகுந்த அட்டைப்பட வடிவமைப்பு கூட பத்மாவதியின் கைவண்ணம் தான். அதற்காக தனியான பாராட்டுகள்!
இந்திய அரசின் பொதுத்துறையிலும் பல்கலைக்கழகக் கல்லூரிகளிலும் பணியாற்றி இந்தி மொழியின் நடை வேறுபாடுகளை நன்குணர்ந்த பயிற்சி இந்த மொழியாக்கப் படைப்பெங்கிலும் பிரதிபலிக்கிறது. உள்ளபடியே இந்த ஐந்து சிறுகதைத் தொகுதிகளும் இந்திக்கு செவ்வியல் தமிழின் அன்பளிப்பு.
manibharati@yahoo.com
முனைவர் எச்.பாலசுப்பிரமணிய
மூன்றாவது குறும்படம் - 'கழுவேற்றம்!'ராஜா என்பவர் இயக்கியிருக்கும் இந்தக் குறும்படம் எழுத்தாளர் தமயந்தியின் சிறுகதை ஒன்றை அடிப்படையாகக் கொண்டது.இளைய மகன் வீட்டில் தங்கியிருக்கும் தாய் அங்கே மருமகளின் நொச்சு தாங்க முடியாமல் தவிக்கிறாள். மனைவி கணவனிடம் அவனுடைய அம்மாவை எங்கேயாவது கொண்டு போய்விட்டுவிட்டு வரும்படி சொல்கிறாள். இல்லாவிட்டால் தான் தனது அம்மா வீட்டுக்குப் போய்விடுவேன் என்று மிரட்டுகிறாள்.இளைய மகன் சென்னையிலிருந்து மதுரையில் இருக்கும் தனது அண்ணனின் வீட்டிற்கு அம்மாவை அழைத்து வருகிறான். அங்கே அண்ணனின் வீடு பூட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் குடும்பத்தோடு கொடைக்கானல் சென்றிருப்பதாகத் தெரிகிறது.பக்கத்து வீட்டுப் பையன் உதவியால் அண்ணனுக்கு போன் செய்து பேசுகிறான் தம்பி.. “இங்க எதுக்கு 'அதை' கூட்டிட்டு வந்த..? நான் வைச்சுக்க முடியாது..? எங்கிட்டாச்சும் கொண்டு போ..?” என்று எரிந்து விழுகிறான் அண்ணன்.. ஆசையாகப் பேசும் அம்மாவிடமும் இதையே சொல்லி பதிலைக்கூட எதிர்பார்க்காமல் போனை கட் செய்கிறான் மூத்தப் பிள்ளை. தொடர்ந்து இவர்கள் முயல, போன் சுவிட்ச் ஆஃப்.இப்போது இளைய மகனும், அம்மாவும் பூங்கா ஒன்றில் அமர்ந்திருக்கிறார்கள். இரவாகிவிட்டது. பூச்சிகளின் சப்தம் மட்டுமே கேட்கிறது. அம்மா "பசிக்குதுப்பா" என்கிறாள் மகனிடம். "நான் போய் ஏதாச்சும் வாங்கிட்டு வரேன்..” என்று சொல்லிவிட்டுச் செல்லும் இளைய மகன், அம்மாவை அப்படியே 'அம்போ' என்று விட்டுவிட்டு, பஸ் ஏறி சென்னை நோக்கி போகிறான்.இங்கே அம்மா காத்திருக்கிறாள்.. காத்திருக்கிறாள்.. காத்திருக்கிறாள்.. நேரங்கள் கடக்க.. அவளுக்கு புரிந்துவிட்டது.. எழுந்து வாக்கிங் ஸ்டிக்கைப் பிடித்தபடியே நடக்கத் துவங்குகிறாள் என்பதோடு இந்தக் குறுங்காவியம் நிறைவடைந்தது.இந்தப் படத்தில் அந்த அம்மா பல்வேறு கோணங்களில் அமர்ந்திருப்பதோடு படத்தினை நிறைவு செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது அபிப்ராயம். ஆனாலும் பரவாயில்லை.. நிறைவாகவே செய்திருக்கிறார் இயக்குநர் ராஜா. பாராட்டுக்கள்..ஒரு திரைப்படம் இரண்டரை மணி நேரத்தில் சொல்லும் நீதியைவிட, வெறும் ஐந்தே நிமிடத்தில் நறுக்கென்று சொல்லி முடித்த இந்த குறும்படத்திற்கு பலமே இதனுடைய உயிரோட்டமான கதைதான்..! .இது போன்ற குறும்படங்களை மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமையன்று 'குறும்பட வட்டம்' என்கிற பெயரில் கூட்டம் நடத்தி திரையிட்டு வருகிறது 'தமிழ்ஸ்டூடியோ.காம்'.மாதம் 50 ரூபாய் கட்டணம் என்கிற சிறு தொகை அன்பளிப்புடன் இந்த நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்கள் இதன் இயக்குநர்கள். கூடவே இலக்கியக் கூட்டம் என்கிற தலைப்பிலும் மாதாமாதம் யாராவது ஒரு இலக்கிய ஆர்வலரை பேச வைக்கிறார்கள். இதில் மேலும் ஒரு சிறப்பு அம்சமாக 'ஈ', 'அஞ்சாதே', 'வெண்ணிலா கபடிக்குழு', 'சிவா மனசுல சக்தி', 'நந்தலாலா' போன்ற படங்களில் சவுண்ட் மிக்ஸிங் இன்ஜீனியராகப் பணியாற்றிய திரு.உதயகுமார் என்பவருடன் நேர்காணல் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.திரு.உதயகுமார் திரைப்படங்களில் சவுண்ட் மிக்ஸிங் செய்வது பற்றிய பல கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் மிகச் சிறப்பாக பதிலளித்தார். "வெண்ணிலா கபடிக் குழு' திரைப்படத்தில் ஸ்பாட் ரெக்கார்டிங்தானாம்.. நல்ல முறையில் வந்திருக்கிறது..” என்றார். "அஞ்சாதே' திரைப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் தனக்குக் கொடுத்த சுதந்திரத்தினால்தான் சிறப்பான முறையில் செய்ய முடிந்தது..” என்றார். "வரவிருக்கும் 'நந்தலாலா' திரைப்படத்தில்கூட கிளைமாக்ஸ் காட்சியான கடைசி 45 நிமிடங்களில், பின்னணி இசையே இல்லாமல் படத்தில் பல உணர்ச்சிப் பூர்வமான சம்பவங்கள் நடப்பதுபோல் திரைப்படம் அமைந்திருக்கிறது" என்றார். 'நந்தலாலா' பற்றி ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு தமிழ்ச் சினிமா உலகில் பரவியிருக்கிறது. பார்ப்போம்.
என்னமோ நிறைய பேர் விகடன்ல வந்த கதையை பாராட்டுறப்ப பிரபஞ்சனின் ஞாபகம் வருது. நீண்ட நாட்கள் ஆகி விட்டன அவர்ட்ட பேசி. தினமும் பேசினால் தான் அன்பென்றால் சத்தியமாக எனக்கு அவர் மேல் அன்பில்லை. ஆனால் 18,19 வயதில் எனக்கு வாழ்க்கையை கற்று கொடுத்தவள் சந்தியா. சந்தியாவை மக்கள் தொலைக்காட்சியில் பெரும் தொல்லையாய் பார்த்தேன். அது விடுதலையின் இயக்கத்தில் வெளிவருவதாய் ஒரு நண்பர் சொன்னார். விடுதலை ஜெகனின் நண்பர். அப்ப அவர பார்த்திருக்கேன்.

பிரபஞ்சன் எல்லாகால கட்டத்திலும் ஒரு நல்ல நண்பராகவே எனக்கு இருந்த்திருக்கார். எல்லா நூற்களுக்கும் அவரே முன்னுரை எழுதி இருக்கார். அப்படி தான் மாலனும் இருந்தார். வாழ்க்கையின் மோசமான ஒரு சந்தில் நான் சிக்கியிருந்த போது வேலை வாங்கி கொடுத்தார். ஆனால் என்னால் அங்கே தொடர்ந்து வேலை பார்க்க முடியவில்ல.
லை. நானே சேர்த்து விட்ட ஒரு பெண்ணால் நானே வினையை இழுத்துக் கொண்டேன். அந்தப் பெண் சேலத்தில் இருந்தாள். காதல் தோல்வியால பாதிக்கப்பட்டிருந்த அவளுக்கு உதவுறதா நினைச்சிக்கிட்டு அவளை சென்னைக்கு வர சொன்னதே நான் தான். மாலன்ட்ட அவள் புகழ் பாடி வேலை வாங்கி கொடுத்தேன். அப்புற்மா நானும் அஙக வேலைக்கசேர்ந்த்தேன். அங்க இருந்த இன்னொரு பெண்ட்ட அவளுக்கு இருந்த பெர்சனல் வன்மத்தை என்ன வ‌ச்சி தீர்த்துக்க முயற்சி பண்ணினா. அது கேரளா பொண்ணு. அசருமா? எனக்கும் இந்த பாலிடிக்ஸ் அசிங்கமா இருந்துச்சு. வேலையும் எதிர்பார்த்த அளவுக்கு சுவாரஸ்யமா இல்ல.

ஒரு நாள் நானே திடும்னு திருவண்ணாமலைக்கு போய்ட்டேன். அங்க சித்திவீட்ல இருந்தப்போ மாலன் போன் போட்டார். அப்ப எனக்கு ரொம்ப உடம்பு முடியாம இருந்த நேரம். சித்தி தான் அவர்ட்ட பேசினாங்க.எனக்கு பேச யோசனையாய் இருந்துச்சு. அதை விட சங்கோஜம். எப்படி அவர்ட்ட இந்த வேலை வேணம்னு சொல்ல முடியும்? முத‌வாட்டி விமான‌த்துல‌ போற‌ வாய்ப்ப‌ அவ‌ர் தான் ஏற்ப‌டுத்திக் கொடுத்தார்.அப்ப‌ சீட் பெல்ட் மாட்ட‌ போராடிட்டிருந்த‌ எங்கிட்ட‌‍ மேலும் நிறைய‌ விமான‌ ப‌ய‌ண‌ங்க‌ள் போக‌ வாழ்த்துக்க‌ள்னு அவ‌ரிக்கேயான‌ புன்ன‌கையோட‌ சொன்னார். வேறொரு க‌ம்ப‌னிக்காக‌ அடிக்க‌டி விமான‌த்துல‌ ப‌ய‌ணிச்ச‌ப்போலாம் சீட் பெல்ட் போடுற‌ப்ப‌லாம் அவ‌ர் சொன்ன‌து குற் உண‌ர்ச்சியோட‌ ஞாப‌க‌ம் வ‌ரும்.

மெயில்ல ராஜினாமா கடிதம் அனுப்பினேன். அதற்கு பதில் வந்திருந்தது‍ யூ ஹேவ் லாஸ்ட் எ ப்ரெண்ட்னு‍. உண்மை தான். மாலன் என்னும் நண்பரை ஒரு வலிமையான காரணங்கள் ஏதுமற்று யாரோவால், உச்சரிக்கப்படாத வார்த்தையால்.. இழந்த்து விட்டேன். 41, பெருமாள்புரத்தில் நாங்க வசித்தப்போ வீட்டுக்கு வந்து நல்லா எழுதுறே.. தொடர்ந்து எழுதுனு சொன்ன மாலனை நண்பர் இல்லைனு அவரே சொன்னாக்கூட ஏத்துக்கணும்னு ஏதும் இருக்கா என்ன?
வீடென்று எதனைச் சொல்வீர்?
அது இல்லை எனது வீடு.
ஜன்னல் போல் வாசல் உண்டு.
எட்டடிக்கு சதுரம் உள்ளே
பொங்கிட மூலை ஒன்று
புணர்வது மற்றொன்றில்
நண்பர்கள் வந்தால்
நடுவிலே குந்திக் கொள்வர்
தலை மேலே கொடிகள் ஆடும்
கால்புறம் பாண்டம் முட்டும்
கவி எழுதி விட்டுச் செல்ல
கால்சட்டை மடித்து வைக்க
வாய் பிளந்து வயிற்றை எக்கிச்
சுவரோரம் சாய்ந்த பீரோ......
....................... கீழும் பூக்கள்.


- மாலன்.

கருத்துக்கள்

ஞாயிறு, மார்ச் 22, 2009 | 0 Comments

Muthuselvam
தனிமையின் வாசனை, தணியாத ஏக்கங்களைக்காட்டுவதான, மிகவும் யதார்த்த சிறுகதை... கீப் இட் அப் தமயந்தி சகோதரி...

இது போன்ற‌ நீளமான தலைப்புகளை வாசித்து மூச்சு இரைத்தது போல்தான் உனக்கும் அவனுக்குமான இடைவெளி நீண்டு கிடக்கிறது. உன் வீட்டு வரவேற்பறையில் சினைகொண்டது போல் ஒரு பல்லி ஓர் எறும்பின் பின்னால் போய்க்கொண்டு இருக்கிறது. அலமாரியின் நிழலில் எறும்பைக் காணாமல் திகைத்து நிற்கிறது. எறும்பின் புண்ணியமோ என்னமோ, அதைக் காணவே இல்லை.
பார்க்காத ஒரு நொடியில் அந்த எறும்பைப் பல்லி விழுங்கிவிட்டதோ என்றுகூட உனக்குத் தோன்றலாம். சுற்றி உள்ள சந்தோஷங்களில் இருந்து சிலர் சந்தோஷங்களை எடுத்துக்கொள்வார்கள். இருக்குமிடம் எல்லாம் சந்தோஷமாக்கிக்கொள்வார்கள் இன்னும் சிலர். நீ சிரிக்கிறாய்... ஆனால், அதில் சிரிப்பு இல்லை.
அலை அடித்துப் போகிற துரும்புகூட சில நேரம் மீள் அலையின் போக்கில் கரையில் ஒதுங்குவது உண்டு. நீ நதியலை மாதிரி. நீர் அடித்துச் செல்லும் திசைகளில் மிதந்து செல்கிறாய். வெளியே பார். ஒரு பூ மலர்ந்து இருக்கிறது. ஆனால், உன் கவலை மேஜையில் வைத்த உருண்டை இட்லிகளை ஏன் அவன் சாப்பிடவில்லை என்பது தான்.
'இத்தத் தூக்கி எறிஞ்சா, என்னாகும்? இந்தியாவில் குண்டுவீச்சுனு தலைப்புச் செய்தியா வரும்' என்று அவன் கிண்டல் செய்தபடி சாப்பிட்ட நாட்கள் உன் கண்ணுக்குள் நிழலாடி, நிழல்கள் கரைந்து கண்ணீர் ஆகின. என்ன பெண் நீ? உணர்வுகளுக்காக அழவா நீ பிறந்திருக்கிறாய்? காரணங்கள் அற்ற உணர்வுகளின் சங்கடம் உன் கண்களில் தேங்கி நிற்கிறது.
தனிமையின் கூர்நொடிகளில் மின்விசிறியின் ஓசைகூட பிரமாண்டமாக எதிரொலிக்கிறது உனக்கு. உன் தனிமையின் வலிகளை உணர்ந்திருப்பானா அவன்? அல்லது, பெண்மையை முற்றிலும் நிராகரிக்கும் ஆண் வர்க்கத்தின் ஒட்டுமொத்த உணர்வு அவனிடமும் இருக்கக்கூடுமோ?

இங்கே பார். நீயும் அவனும் எடுத்துக்கொண்ட புகைப்படம். நீ கூட லேசாகப் புன்னகைக்கிறாய். அவன் முகத்தில் ஓர் இறுக்கம் இருக்கவே செய்கிறது. ஒருவேளை, ஏதாவது நிர்பந்தத்தில்தான் உன்னைத் திருமணம் செய்துகொண்டானோ? முறைக்காதே. பயமாக இருக்கிறது. ஒரு பேச்சுக்குச் சந்தேகங்களைக் கேட்கக் கூடாதா?
இப்போதும் அவனை விட்டுக்கொடுக்கப் பிடிக்காத உன் மனநிலையை அவன் புரிந்துகொண்டால் சரி. ஆனால், புரிந்து கொள்வானா? அவனுக்கான பல பிரச்னைகளில் நீ ஒரு துரும்பாகக்கூட இருக்கலாம். மையப் புள்ளியாகவும் இருக்கலாம்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உன் அம்மா, நடுக்கூடத்தில் உட்கார்ந்து புட்டுக்கு மாவு பிசைவாள். உப்புத் தண்ணீரை ஒரு சின்னக் குவளையில் வைத்துக்கொண்டு மாவில் தெளித்துப் பிசறுவாள். பாசிப் பயிறை கடுகு, வத்தல் போட்டுத் தாளித்துத் தேங்காய்ப் பூ துருவிப் போட்டு சீனி தூவுவாள். எல்லாவற்றுக்கும் அததற்கான வாசனை உண்டு. உன் தனிமைக்கான வாசனை?
வெறும் காற்று அலையும் அறை. ஒரு ராஜகுமாரியின் உயிர் இருக்கும் வசியப்பெட்டி போல உன் வானொலி. அதில் இழையும் இசை உன் மேல் படர்ந்து ஜன்னல் வழியே தப்பிக்கிறது. எதுவும் தங்குவதில்லை உன்னுடன். உன்னைத் தவிர.
நீ இழந்த உன் குழந்தையின் குரலை நீ மறுபடியும் கேட்க முயல்கிறாய் என்று கடவுள் சொன்னார். பிறக்காத ஒரு குழந்தையின் குரலுக்காக யாசகம் கேட்கிற ஒரே மனுஷி நீயாக மட்டுமே இருக்க முடியும். அல மாரியைப் பார்த்தால் இட்லியாகத் தெரிகிறது. ஆரஞ்சு வண்ணத்தில் உடுப்பு. வசம்புக் கயிறு. தலைமுடியில் குத்த சிவப்பு க்ளிப். கடவுளுக்கு உன் அலமாரியைக் காட்ட வேண்டும்.
தங்கம் அக்கா தெரியுமில்லையா உனக்கு? புருஷனைக் கைக்குள் போட்டுக்கொண்டு மாமியாக்காரியை அடிக்கிற பிடாரி. ஆனால், அவளை மாதிரி உன்னால் தத்துவம் பேச முடியுமா? ஒன்று செய், உன் புத்தகங்களுக்கு உயிர் கொடுக்க கடவுளிடம் வரம் கேள். அதில் பிடித்த புருஷனைக் கட்டிக்கொள். ஹா... ஹா..!
சிரிப்பதைப் பார்த்துப் புருவம் சுருக்குகிறாய். நீ ரொம்பவும் அழகாக இருக்கும் சமயங்கள், நீ புருவம் சுருக்குகிற நேரங்கள். நீ அழகு என்று சொல்லும்போது ஏற்படும் சந்தோஷம், அவன் சொன்னால் எப்படி இருக்கும் என்று மறுகேள்வி கேட்கும்போது நதியின் அலையில் சுருளாக மறையும் நிலவாக மறைகிறது.
எங்கு வந்தது, எப்படி வந்தது இந்த இடைவெளி? ஒரு துண்டுக் காகிதம் தரையில் விழுந்த சப்தம் பிரமாண்டமான பரிணாமங்களை அடைவது போல், 'சாப்பிடுறீங்களா?' என்று நீ கேட்கிறாய். 'ம்' என்கிறான். அவன் தட்டுச் சாப்பாட்டை எடுத்துவைக்கிறாய் 'குழம்பு விடவா?' என்றதும், 'ம்' என்கிறவன் 'கொஞ்சமா' என்று நீளமான வாக்கியம் ஒன்று பேசியதுபோல எச்சில் மிடறு விழுங்குகிறான்.
எங்கோ தொமீல் என்று சத்தம் கேட்கிறது. நீ சடார் என எழுந்து எட்டிப் பார்க்கிறாய். பக்கத்து வீட்டு ஜன்னல், காற்றில் மூடின சத்தம். கீழே உட்கார்கிறாய். அவன் நிமிர்ந்தே பார்க்காமல் சாப்பிட்டபடி இருக்கிறான். நீ விரலைத் தட்டுக்கு நேரே நீட்டி, 'கூட்டு' என்கிறாய்.
'வேணாம்.'
'ஏன், ஒண்ணுமே பேச மாட்டேங்கிறீங்க?'
'ம்?' என்கிறான்.
'அதான்...'
'ரசம்' என்கிறான்.
கண்களில் நீர் நிறைகிறது உனக்கு. அவன் போன தும் வீட்டைப் பூட்டிவிட்டு விறுவிறு என்று எங்காவது போய்விட வேண்டும். 'ரசம்', 'ம்?' என்று அவன் தனியாகப் பேசட்டும் என்று உனக்குத் தோன்றுகிறது.
பாதிச் சாப்பாட்டை மீதி வைத்துவிட்டு எழுந்தான். ஒரு நாயாவது வளர்த்திருக்கலாம் நீ. அல்லது உனக்கா வது ஒரு வால் இருந்திருக்கலாம். மறுபடியும் முறைக் கிறாய். ஏன் உனக்கு அவன் மேல் மட்டும் கோபம் வந்தாலும் உடனே மறைந்துவிடுகிறது?
அந்தப் பல்லி, எறும்பைப் பிடித்துவிடக்கூடும்.நாளைய பொழுது விடிந்துவிடக்கூடும். ஆனால், உங்க ளுக்கான இடைவெளி நீண்டுகிடக்கும், இரை உண்ட மலைப் பாம்பின் விஸ்தாரத்தோடு. மீதி சாப்பாட்டை என்ன செய்ய என்று யோசித்து, ஷெல்ஃபில் இருந்து ஒரு தட்டை எடுத்து மூடிவைக்கிறாய். ஆம்பூர் பிரியாணி பற்றி உன் அப்பா பேசும் வார்த்தைகளின் வாசம் இப்போது உன்னைச் சுற்றிக்கொள்கிறது.
ஒரு பல்லியாக, ஒரு எறும்பாக, ஒரு நாயாக, ஒரு வானொலிப் பெட்டியாக நீ பிறந்திருக்கலாம் என்று தோன்றுகிறதா உனக்கு? நல்லவர்கள் எல்லோருமே தோற்றுப்போகிறவர்கள்தான் என்று உச்சி மலையில் நின்று கண்ணீர் வழிய வழியச் சொல்லத் தோன்றுகிறதா?
நீ சாய்ந்துகொள்ளத் தோளும் உன்னைப் பாதுகாக் கும் ஸ்பரிசமும் அவனிடம் இருக்கிறது. ஆனால், அவனிடம் மட்டுமே இருக்கிறது. பல்லியிடமிருந்து தப்பிய எறும்பு இப்போது நீ மூடிவைத்த தட்டின் வெளிப்புறமாக ஒட்டியிருக்கும் சோற்றுப் பருக்கையைச் சாப்பிடலாம். அலமாரியில் வைக்கப்பட்ட வசம்புக் காப்பு, பிறக்காத குழந்தைக்காகக் காத்திருக்கலாம்!
மெள்ள எழுந்து ஜன்னல்களை நீ சாத்தும் வேகத்தைப் பார்த்தால், நீ இந்த இடைவெளியைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பவில்லை. வெளியே இடைவெளியைக் கிழித்துக்கொண்டு கிளம்பப் போகிறாற்போல் தோன்று கிறது.
கடைசி ஜன்னலைப் பூட்டும்போது அவன் கடந்து போன சாலையைப் பார்க்கிறாய். பார்வைகள் அநாதை யாகுமா? உன் கண்களில் உலவுகிறது ஓர் அநாதையின் முற்றுப்பெறாத பயணம். தூக்க மாத்திரைகள் சாப் பிட்டோ, தூக்குப் போட்டோ, நீ முடிவு மேற்கொள்ளப் போகிறாயோ என்று பயம் வருகிறது முதன்முதலாக.
நிதானமாக நடந்து கழிப்பறைக்குள் போகிறாய். நாலுக்கு எட்டடி அறை. சுவரில் இருக்கும் ஷெல்ஃபில் பழைய தமிழ் வார சஞ்சிகைகள் கிடக்கின்றன. உன் உதடுகள் 'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை' என முணுமுணுக்கிறது. 'வாரணம் ஆயிரம்' படத்து சூர்யா மாதிரி, முதுகில் கிடார் சுமந்து அவன் வந்து கதவைத் தட்டுவான் என்று நினைக்கிற வேளையில், எதிர்பாரா மல் இரண்டு குழாய்களையும் திறந்துவிடுகிறாய்.
மூடின கதவு, ஜன்னல் வழியாக சப்தங்கள் வெளி யேற முடியாத தருணத்தில் இரைச்சலாக வழியும் அருவியாக நிசப்தம் கிழித்து உன் காலடியில் வந்து விழுகின்றன நீர்த் திவலைகள்!
முப்பது நாள்ல எப்ப்டி அரசியல் செய்றதுனு முத்து கேட்டிருந்தார். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் இல்லாத அரசியலா?(எங்க வீட்டுல சண்டையே கிடையாதுனு சொல்லிடாதீங்க ப்ளீஸ்)இந்த வார விகடன்ல கதை வந்திருகிறது‍ தனிமையின் வாசனை என்று. நான் கொடுதததோ நீளமான தலைப்பு‍ நமக்கான இடைவெளிகளுக்குள் கூடு கட்டும் தூக்கணாங்குருவி‍னு.வாசிச்சு பாத்து சொல்லுஙக.ச‌ர்வ‌ம் ப‌ட‌த்துல‌ ஒரு பாட்டு இருக்கு. அடடா‍னு. கேட்டு பாருங‌க‌.வாழ்க்கை ஒரு பூக்கூடை. யார் கையிலும் பூ பூக்க‌லாம்னு. நல்லா இருக்கு.வாழ்க்கைக்கு எங்க பாடம் எடுக்காங்கனும் ஒரு வரி இருக்கு.
நேத்து ட‌வுண் குற்றால‌ ரோட்ல‌ ராத்திரி ஒரு ப‌த்து ம‌ணிக்கு ரெண்டு பேர் த‌ண்ணி அடிச்சிட்டு ஒருத்த‌ர‌ஒருத்த‌ர் அடிச்சிக்கிட்டாங்க‌. ர‌த்த‌ம் வ‌டிய‌ வ‌டிய‌ ரோட்டுக்கு குறுக்க‌ ஓடி வ‌ந்து ஒரு ரூவா தொலைபேசில‌ ‍‍" ஏல‌.. என்னை அடிசசிப்புட்டாம்ல‌ ...ம‌ண்டை ஒடைச்சிட்டான்." யாருக்கோ போன் போட்ட‌தை பார்த்தேன்.
பார்த்துட்டு இருந்த‌ ஒருவ‌ர் சொன்னார் : இவ‌னுக‌ளுக்கு டாஸ்மார்க்ல் ஒரு சொட்டு விஷ‌ம் க‌ல‌க்கி கொடுக்க‌லாம‌.
கடைசி பக்கம் தொலைந்த டைரிவிரிந்த ஒரு பாலைவனம் போல உடல் முழுக்க ஒரு வெறுமை நிறைகிறது இவளுக்கு.நான் சுகமில்லாமல் போனா நீ என்ன பாத்துப்பாயானு கேட்கிறாள். ஒ... கண்டிப்பா ஹர்ர்லிக்ஸ் மட்டும் வாஙகி தர மாட்டேன்னு சொன்னேன்.இவ‌ளுக்கு கோப‌ம் வ‌ருகிற‌து.அது என்ன‌ மாய‌மோ தெரில‌.சுக‌மில்லாத‌வ‌ங‌கள‌ பாக்க‌ப் போனோ,னா அது ஹார்லிக்ஸ் தான்.ம‌ஞ்ச‌ள் காமாலையால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ போது அப்பா ஹார்லிக்ஸ் க‌ல‌க்கி கொடுப்பார். ரொம்ப‌வும் நீர்த்து இருக்கும். ஆனாலும் எந்த‌ அப்பா செய்வார்?அப்பாவை பார்க்க‌ வேண்டும் போல் இருக்கு என்று முணுமுணுக்க‌ ஆர‌ம்பித்தாள்.
காலை வரை முணுமுணுப்பு நிற்காது. என‌க்கு தெரியும்.

அவனுக்கு ஒரு கடிதம் எழுத இவளுக்கு தோன்றியிருக்க வேண்டும . என்னிடம் காட்டிய தாளில் ஈர பிசுபிசுப்பிருந்தது. உள்ளங்கை வியர்வையாய் இருக்கலாம்.அல்லது கண்ணீர் விழுந்ததிருகலாம்.
ஒரு அறை. மின்விசிறி. பாதி திறந்த‌ ஜ‌ன்ன‌ல் வ‌ழியாய் உள்ளே நுழையும் காற்று.சுலோச‌னா முத‌லியார் பால‌த்துக்கு கீழ‌ ஓடுற‌ தாமிர‌ப‌ர‌ணில‌ கால் ந‌னைக்க‌ணும். அப்பா சினன‌ வ‌ய‌சுல‌ சைக்கிள்ல‌ வ‌ச்சு கூட்டிட்டு போய் வெள்ள‌ம் காண்பிச்சிருக்கார். இப்ப‌ பேச‌ கூட‌ ச செய்வ‌தில்லை அவ‌ர். தூக்க‌த்தில் கால் வ‌லிச்சா கூட‌ தைல‌ம் தேச்சி கால் பிடிச்சி விட்டிருக்காடஎப்ப‌ தூங்ரோம்னே தேரியாது.
இவ‌ளிட‌ம் சொல்ல‌ வேணும்‍ ராஜ‌வேல் மொக்கையா ப்ளாக் எழுதுக்கானு சொன்ன‌த‌. அப்ப‌ தான்க்கா நிறைய பேர் ப‌டிப்பாஙகனு சொன்னான். மதுரைலருந்து அப்பாஸ் கூட நீங்க நல்லா எழுதுறீங்க. ஆனா அரசியல் பண்ண தெரியாததுனால உங்களால பெருசா வர முடியலனார்.
முப்பது நாளல அரசியல் பண்றது எப்படினு யாராச்சும் சொல்லுங்க.
ராஜவேலுக்கு இந்த பதிவு பிடிச்சிருந்தா சந்தோஷம்‍ இவளிடம் மனிப்பு கேட்டுக்கலாம்--
என்ன செய்ய ? டைப் ப்ண்றப்போ சில நேரம் தப்புதப்பா தான் பதிவாயிடுது. முன்னெல்லாம் இவளுக்கு கவலையாயிருக்கும். இப்பெல்லாம் சகஜமாயிருச்சு. வடிவேலு ஜோக் வந்த்ததிலருந்தே இந்த வார்த்தை பிரபலம் ஆயிருச்சு இல்லையா?
நேத்திக்கு கோவில்பட்டி நேஷனல் என்ஜினியரிங் காலேஜ் போனேன். அந்த பசஙகட்டருந்த சந்தோஷம் பாக்க அழகாருந்தஉச்சு. இவளையும் கூடடி போயிருந்திருக்கலாம்.
இப்ப‌ ஒரு பாட்டு வந்திருக்கு. நண்ப‌ர் விஜ்ய‌ல‌க்ஷ்ம‌ண் அவ‌ர் ஜி.மெயில் ஐ,டிக்கு டேக்க‌ வைச்சிருக்கார். ஒண்ணுக்கு ஒண்ணு துணையா இருக்கிற‌ உல‌க‌த்துல‌ அன்பு ம‌ட்டும் தான் அனாதை‍னு, நல்லாருக்கு. இவ‌ வாழ்க்கைய‌ யாராச்சும் ப‌ட‌ம் புடிச்சா இத‌ டைட்டில் பாட்டா வைங்க‌
கடைசி பக்கம் தொலைந்த டைரிஎங்க ஆரம்பிச்ச வாழ்க்கைனு நினைச்சா குழப்பமா இருக்கு. எத்தனை எத்தனை கனவுகள் எத்தன பேருக்கு பொய்யா போயிருக்கு. ஆனாக்கூட‌எல்லாருக்கும் அழகான குடும்பங்கள் வாய்ச்சிருக்கு.முகத்துல சந்தோஷத்துடன் எத்தன‌ பேர் சாலைல போறாங்க.காக்கா போட்ட எச்சிலாய் நகருது வாழ்க்கை. எந்த ஸ்வாரஸ்யமும் அற்று.சாய்ந்த்து கொள்ள ஒரு தோள். மனசு விட்டு பேச ஒரு துணை. மேலே நட்சத்திரம் மின்னும் ஒருவானம். இடைவெளியில் படரும் நேசம்.இந்த உலகத்துககாக ஆசைபபடும் இவளின் இந்த டைரியின் கடைசி ப்க்கம் மட்டும் தொலைந்து போனது..

இவளின் டைரி குறிப்புகள்

வியாழன், மார்ச் 12, 2009 | 0 Comments

எதற்காக வாழ்க்கையில் இவ்ளோ போராட்டம்? அன்பான குடும்பம்ங்கிறது இவளுக்கு அமையாமலே ஏன் போச்சு?ஆசைபட்டது போல் எல்லாமும் கிடைக்காது. மொட்டை மாடில் நின்னு நிலா பார்த்தா இருடுக்குள்ள‌ தெரியுது பிடிச்சவங்களோட முகம்லாம்.சாவதுகுள்ள ஒரு வாட்டியாவது கடவுள நேர்ல் பார்த்து சில கெள்விகள் கேக்கணும்.தனியாயிருக்கும் போது என்ன என்ன கேள்விகள்னு யோசிச்சு வைக்கணும்.
தினமும் இனிம டைரி எழுதணும்.நாளைக்கு வெள்ளிக்கிழ‌மை.நாளை ராத்திரி வ‌ரைக்கும் இவ‌ள் உயிரோடிருக்க‌ வெண்டும்,பிராத்தித்துக் கொள்ளுங்க‌ள் ‍இவ‌ள் கெள்வி கேட்க‌ விரும்பும் க‌ட‌வுளிட‌ம்

பாம்புகள்

புதன், மார்ச் 11, 2009 | 0 Comments

நீண்டு கிடக்குது பாம்பு உனக்கும் எனக்கும் நடுவில்.காடுகளின் ஸ்பரிசம் அற்று ஒரு பூனையின் பதுஙகலோடு...போர்வையாய் அதை நீ உபயோகிக்கலாம்.பயந்து என் இரவை விழித்திருந்தே நானும் கழிக்கலாம்‍
எனினும் பாம்புகள் பாம்புகள் தான்

About