அவனுக்கு ஒரு கடிதம் எழுத இவளுக்கு தோன்றியிருக்க வேண்டும . என்னிடம் காட்டிய தாளில் ஈர பிசுபிசுப்பிருந்தது. உள்ளங்கை வியர்வையாய் இருக்கலாம்.அல்லது கண்ணீர் விழுந்ததிருகலாம்.
ஒரு அறை. மின்விசிறி. பாதி திறந்த ஜன்னல் வழியாய் உள்ளே நுழையும் காற்று.சுலோசனா முதலியார் பாலத்துக்கு கீழ ஓடுற தாமிரபரணில கால் நனைக்கணும். அப்பா சினன வயசுல சைக்கிள்ல வச்சு கூட்டிட்டு போய் வெள்ளம் காண்பிச்சிருக்கார். இப்ப பேச கூட ச செய்வதில்லை அவர். தூக்கத்தில் கால் வலிச்சா கூட தைலம் தேச்சி கால் பிடிச்சி விட்டிருக்காடஎப்ப தூங்ரோம்னே தேரியாது.
இவளிடம் சொல்ல வேணும் ராஜவேல் மொக்கையா ப்ளாக் எழுதுக்கானு சொன்னத. அப்ப தான்க்கா நிறைய பேர் படிப்பாஙகனு சொன்னான். மதுரைலருந்து அப்பாஸ் கூட நீங்க நல்லா எழுதுறீங்க. ஆனா அரசியல் பண்ண தெரியாததுனால உங்களால பெருசா வர முடியலனார்.
முப்பது நாளல அரசியல் பண்றது எப்படினு யாராச்சும் சொல்லுங்க.
ராஜவேலுக்கு இந்த பதிவு பிடிச்சிருந்தா சந்தோஷம் இவளிடம் மனிப்பு கேட்டுக்கலாம்--
கடைசி பக்கம் தொலைந்த டைரி-௧௬-0௩-09
திங்கள், மார்ச் 16, 2009 | 1 Comments
கடைசி பக்கம் தொலைந்த டைரி
ஞாயிறு, மார்ச் 15, 2009 | 2 Comments
என்ன செய்ய ? டைப் ப்ண்றப்போ சில நேரம் தப்புதப்பா தான் பதிவாயிடுது. முன்னெல்லாம் இவளுக்கு கவலையாயிருக்கும். இப்பெல்லாம் சகஜமாயிருச்சு. வடிவேலு ஜோக் வந்த்ததிலருந்தே இந்த வார்த்தை பிரபலம் ஆயிருச்சு இல்லையா?
நேத்திக்கு கோவில்பட்டி நேஷனல் என்ஜினியரிங் காலேஜ் போனேன். அந்த பசஙகட்டருந்த சந்தோஷம் பாக்க அழகாருந்தஉச்சு. இவளையும் கூடடி போயிருந்திருக்கலாம்.
இப்ப ஒரு பாட்டு வந்திருக்கு. நண்பர் விஜ்யலக்ஷ்மண் அவர் ஜி.மெயில் ஐ,டிக்கு டேக்க வைச்சிருக்கார். ஒண்ணுக்கு ஒண்ணு துணையா இருக்கிற உலகத்துல அன்பு மட்டும் தான் அனாதைனு, நல்லாருக்கு. இவ வாழ்க்கைய யாராச்சும் படம் புடிச்சா இத டைட்டில் பாட்டா வைங்க

வெள்ளி, மார்ச் 13, 2009 | 0 Comments
கடைசி பக்கம் தொலைந்த டைரிஎங்க ஆரம்பிச்ச வாழ்க்கைனு நினைச்சா குழப்பமா இருக்கு. எத்தனை எத்தனை கனவுகள் எத்தன பேருக்கு பொய்யா போயிருக்கு. ஆனாக்கூடஎல்லாருக்கும் அழகான குடும்பங்கள் வாய்ச்சிருக்கு.முகத்துல சந்தோஷத்துடன் எத்தன பேர் சாலைல போறாங்க.காக்கா போட்ட எச்சிலாய் நகருது வாழ்க்கை. எந்த ஸ்வாரஸ்யமும் அற்று.சாய்ந்த்து கொள்ள ஒரு தோள். மனசு விட்டு பேச ஒரு துணை. மேலே நட்சத்திரம் மின்னும் ஒருவானம். இடைவெளியில் படரும் நேசம்.இந்த உலகத்துககாக ஆசைபபடும் இவளின் இந்த டைரியின் கடைசி ப்க்கம் மட்டும் தொலைந்து போனது..
இவளின் டைரி குறிப்புகள்
வியாழன், மார்ச் 12, 2009 | 0 Comments
எதற்காக வாழ்க்கையில் இவ்ளோ போராட்டம்? அன்பான குடும்பம்ங்கிறது இவளுக்கு அமையாமலே ஏன் போச்சு?ஆசைபட்டது போல் எல்லாமும் கிடைக்காது. மொட்டை மாடில் நின்னு நிலா பார்த்தா இருடுக்குள்ள தெரியுது பிடிச்சவங்களோட முகம்லாம்.சாவதுகுள்ள ஒரு வாட்டியாவது கடவுள நேர்ல் பார்த்து சில கெள்விகள் கேக்கணும்.தனியாயிருக்கும் போது என்ன என்ன கேள்விகள்னு யோசிச்சு வைக்கணும்.
தினமும் இனிம டைரி எழுதணும்.நாளைக்கு வெள்ளிக்கிழமை.நாளை ராத்திரி வரைக்கும் இவள் உயிரோடிருக்க வெண்டும்,பிராத்தித்துக் கொள்ளுங்கள் இவள் கெள்வி கேட்க விரும்பும் கடவுளிடம்
தினமும் இனிம டைரி எழுதணும்.நாளைக்கு வெள்ளிக்கிழமை.நாளை ராத்திரி வரைக்கும் இவள் உயிரோடிருக்க வெண்டும்,பிராத்தித்துக் கொள்ளுங்கள் இவள் கெள்வி கேட்க விரும்பும் கடவுளிடம்
பாம்புகள்
புதன், மார்ச் 11, 2009 | 0 Comments
நீண்டு கிடக்குது பாம்பு உனக்கும் எனக்கும் நடுவில்.காடுகளின் ஸ்பரிசம் அற்று ஒரு பூனையின் பதுஙகலோடு...போர்வையாய் அதை நீ உபயோகிக்கலாம்.பயந்து என் இரவை விழித்திருந்தே நானும் கழிக்கலாம்
எனினும் பாம்புகள் பாம்புகள் தான்
எனினும் பாம்புகள் பாம்புகள் தான்