அவனுக்கு ஒரு கடிதம் எழுத இவளுக்கு தோன்றியிருக்க வேண்டும . என்னிடம் காட்டிய தாளில் ஈர பிசுபிசுப்பிருந்தது. உள்ளங்கை வியர்வையாய் இருக்கலாம்.அல்லது கண்ணீர் விழுந்ததிருகலாம்.
ஒரு அறை. மின்விசிறி. பாதி திறந்த‌ ஜ‌ன்ன‌ல் வ‌ழியாய் உள்ளே நுழையும் காற்று.சுலோச‌னா முத‌லியார் பால‌த்துக்கு கீழ‌ ஓடுற‌ தாமிர‌ப‌ர‌ணில‌ கால் ந‌னைக்க‌ணும். அப்பா சினன‌ வ‌ய‌சுல‌ சைக்கிள்ல‌ வ‌ச்சு கூட்டிட்டு போய் வெள்ள‌ம் காண்பிச்சிருக்கார். இப்ப‌ பேச‌ கூட‌ ச செய்வ‌தில்லை அவ‌ர். தூக்க‌த்தில் கால் வ‌லிச்சா கூட‌ தைல‌ம் தேச்சி கால் பிடிச்சி விட்டிருக்காடஎப்ப‌ தூங்ரோம்னே தேரியாது.
இவ‌ளிட‌ம் சொல்ல‌ வேணும்‍ ராஜ‌வேல் மொக்கையா ப்ளாக் எழுதுக்கானு சொன்ன‌த‌. அப்ப‌ தான்க்கா நிறைய பேர் ப‌டிப்பாஙகனு சொன்னான். மதுரைலருந்து அப்பாஸ் கூட நீங்க நல்லா எழுதுறீங்க. ஆனா அரசியல் பண்ண தெரியாததுனால உங்களால பெருசா வர முடியலனார்.
முப்பது நாளல அரசியல் பண்றது எப்படினு யாராச்சும் சொல்லுங்க.
ராஜவேலுக்கு இந்த பதிவு பிடிச்சிருந்தா சந்தோஷம்‍ இவளிடம் மனிப்பு கேட்டுக்கலாம்--

1 பின்னூட்டங்கள்:

MUTHUNAGAR MUTHU சொன்னது…

ஆனா அரசியல் பண்ண தெரியாததுனால உங்களால பெருசா வர முடியலனார்.
முப்பது நாளல அரசியல் பண்றது எப்படினு யாராச்சும் சொல்லுங்க..... ulakin mika pazhamaiyana thozhil arasiyalame!!! adhai 30 naatkalil padithuvidavo alladhu ezhidhividavo mudiyuma enna..? enakku romba naatkalaaka oru sandhekam.. yaaridam ketpathu endrum theriyavillai... Diariyil namathu antharangankalai ezhuthuvathil ellai enna..?

About