வாழ்க்கையை ஜெயித்திருக்கக் கூடிய ஒரு பெண் தன்னை ஜெயிக்க முடியாமல் போனதால் அதனிடம் காயம்பட்டாள் என உன்னுடைய tombstone எழுதப்பட்டு விடக்கூடாது.= இது நேற்று மெயிலில் எனக்கு வந்த நான் மிகவும் நேசிக்கும், மதிப்பவர் எனக்காக எழுதிய வரி.நிஜமான அன்பு, அக்கறை, பரிவுடன் இதை வாசிக்கும் போது தான் எனக்கு ஒரே சமயம் எப்படி மனசுல ச்ந்தோஷமும் கண்ணுல ஈரமும் வரும்னு தெரிஞ்சிது.

எங்க அப்பா அடிக்கடி சொல்வார் = காலுக்கு ஷூ இல்லைனு கவலப்படுறது கால் இல்லாத ஒருத்தரைப் பார்க்குற வரைக்கும தான்னு.ஒரு தும்மல் நம்மை இம்சிக்கிறதுனா ஒரு தடவை ஏதாச்சும் பொதுமருத்துவமனைக்கு போயிட்டு வந்தா நம்ம கஷ்டம் ஒண்ணுமே இல்லாம ஆக்கிடும்.


வாழ்க்கையில் நான் நிறைய இழந்திருக்கிறேன். அல்லது வாழ்க்கை எனக்குப் பிடித்த விஷயங்களை என்னிடமிருந்து பறித்திருக்கிறது.22வது வயதில் ஒரு தமிழ் பத்திரிக்கையின் ஆசிரியராகும் வாய்ப்பு வந்தது. அதற்காகவே பால்யூ வீட்டுக்கு வந்தார்.ந‌டந்துட்டே பேசுறேன்னு சொல்லிட்டு அப்பவே 25,000 ரூபா சம்பளம்னு சொன்னார்.எனக்கு அவருக்கு அன்றய சூழல்ல என்ன பதில் சொல்ல முடியும்னு தெரியும். அன்னைக்கு வீட்டுல வத்தக் குழம்பும் அவரைக்காய் பொரியலும் வைத்திருந்தேன். சாப்பிடுங்கனு சொன்னோன பிகு பண்ணிக்காம கொஞ்சம் நல்லெண்ணெய் விடு வத்தக் குழம்புலனு வீட்டு ஆள் மாதிரி சாப்பிட்டது இப்ப நினைச்சா கூட சந்தோஷமாருக்கு.போய் லெட்ட்ர் போடுறோம்னு சொல்ற மாப்பிள்ளை வீட்டுக்காரங்க மாதிரி கொஞ்சம் யோசிச்சு சொல்றேன்னு அவர் கிட்ட சொல்லியாச்சு. அப்புறமா வீட்டுல பொது குழு போட்டு குழந்தையைக் காரணம் காட்டி வேலை வேணாம்னு சொல்லிடலாம்னு முடிவாச்சு.
இந்த நிலையை விட்டு வெளி வர நான் விலையாய் கொடுத்தது‍ உறவுகளை.முதலில் தடுமாற்றங்களுடன் ஆரம்பித்த இந்த பயணத்தை இப்ப நானே முன்னே வந்து மதிப்பீடுகிற தூரத்துக்கு வந்து விட்டேன்.
நாலு வருஷமாய் இந்த உற்வை நாம் இழந்து விட்டோமேனு மனசுள்ள பூட்டிப் பூட்டிப் வச்ச ஒரு கனம் மேலே சொன்ன வரிகள் சுமந்த மினன‌ஞ‌சலில் கரைந்துப் போகிறது.

வருத்தம்தான். கோபமெல்லாம் கிடையாது. கோபப்படமுடியாத குழந்தைகளில் நீயும் ஒன்று‍ இப்படி இடையூறிய வரிகள் , அத்னூடே பரவிய ஒரு ஆத்மார்த்தமான ப்ரியம் என்னை நீண்ட நாள் கழித்து அழ வைதது என்பதை நான் வெட்கமில்லாமல் சொல்கிறேன்.

வாழ்க்கையை ஜெயித்திருக்கக் கூடிய ஒரு பெண் தன்னை ஜெயிக்க முடியாமல் போனதால் அதனிடம் காயம்பட்டாள் என உன்னுடைய tombstone எழுதப்பட்டு விடக்கூடாது‍=

ஆனால் இங்கே நான் தோற்றுப் போனது அன்பால்..

0 பின்னூட்டங்கள்:

About