முப்பது நாள்ல எப்ப்டி அரசியல் செய்றதுனு முத்து கேட்டிருந்தார். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் இல்லாத அரசியலா?(எங்க வீட்டுல சண்டையே கிடையாதுனு சொல்லிடாதீங்க ப்ளீஸ்)இந்த வார விகடன்ல கதை வந்திருகிறது‍ தனிமையின் வாசனை என்று. நான் கொடுதததோ நீளமான தலைப்பு‍ நமக்கான இடைவெளிகளுக்குள் கூடு கட்டும் தூக்கணாங்குருவி‍னு.வாசிச்சு பாத்து சொல்லுஙக.ச‌ர்வ‌ம் ப‌ட‌த்துல‌ ஒரு பாட்டு இருக்கு. அடடா‍னு. கேட்டு பாருங‌க‌.வாழ்க்கை ஒரு பூக்கூடை. யார் கையிலும் பூ பூக்க‌லாம்னு. நல்லா இருக்கு.வாழ்க்கைக்கு எங்க பாடம் எடுக்காங்கனும் ஒரு வரி இருக்கு.
நேத்து ட‌வுண் குற்றால‌ ரோட்ல‌ ராத்திரி ஒரு ப‌த்து ம‌ணிக்கு ரெண்டு பேர் த‌ண்ணி அடிச்சிட்டு ஒருத்த‌ர‌ஒருத்த‌ர் அடிச்சிக்கிட்டாங்க‌. ர‌த்த‌ம் வ‌டிய‌ வ‌டிய‌ ரோட்டுக்கு குறுக்க‌ ஓடி வ‌ந்து ஒரு ரூவா தொலைபேசில‌ ‍‍" ஏல‌.. என்னை அடிசசிப்புட்டாம்ல‌ ...ம‌ண்டை ஒடைச்சிட்டான்." யாருக்கோ போன் போட்ட‌தை பார்த்தேன்.
பார்த்துட்டு இருந்த‌ ஒருவ‌ர் சொன்னார் : இவ‌னுக‌ளுக்கு டாஸ்மார்க்ல் ஒரு சொட்டு விஷ‌ம் க‌ல‌க்கி கொடுக்க‌லாம‌.
கடைசி பக்கம் தொலைந்த டைரிவிரிந்த ஒரு பாலைவனம் போல உடல் முழுக்க ஒரு வெறுமை நிறைகிறது இவளுக்கு.நான் சுகமில்லாமல் போனா நீ என்ன பாத்துப்பாயானு கேட்கிறாள். ஒ... கண்டிப்பா ஹர்ர்லிக்ஸ் மட்டும் வாஙகி தர மாட்டேன்னு சொன்னேன்.இவ‌ளுக்கு கோப‌ம் வ‌ருகிற‌து.அது என்ன‌ மாய‌மோ தெரில‌.சுக‌மில்லாத‌வ‌ங‌கள‌ பாக்க‌ப் போனோ,னா அது ஹார்லிக்ஸ் தான்.ம‌ஞ்ச‌ள் காமாலையால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ போது அப்பா ஹார்லிக்ஸ் க‌ல‌க்கி கொடுப்பார். ரொம்ப‌வும் நீர்த்து இருக்கும். ஆனாலும் எந்த‌ அப்பா செய்வார்?அப்பாவை பார்க்க‌ வேண்டும் போல் இருக்கு என்று முணுமுணுக்க‌ ஆர‌ம்பித்தாள்.
காலை வரை முணுமுணுப்பு நிற்காது. என‌க்கு தெரியும்.

About