கடவுள்

புதன், மார்ச் 25, 2009 | 0 Comments

கடவுள் : கடவுள் இருக்கார் இல்லைனு இன்னைக்கும் நிறைய விவாதம் கருத்தியல்ரீதியாக நட‌ந்துட்டே தான் இருக்கு. சினிமால சாமி கதாபாத்திரங்கள் நீண்ட காலமாக வெற்றி பெறும் விஷயங்களாக இருக்கிறது.திருவிளையாடல் பார்த்தப் பிற்கு சாமினா சிவாஜி மாதிரி இருப்பார்னு சின்ன வயசுல நினைச்சிருக்கேன்.என் ஆத்துமாவேனு சொல்லிட்டு ஜெபம் பண்ணுனு சொல்லிக் கொடுக்கப்பட்டு வள்ர்ந்தேன். வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகள், வலிகள், துரோகங்கள் எல்லாவற்றுக்கும் கடவுள்ட்ட கேள்வி கேக்காம இருக்க முடியல.நான் நீதிபதி சீட்லயும் கடவுள் கீழேயும் நின்னு கேள்வி கேட்கிறாற் போல் கனவுலாம் எனக்கு வந்திருக்கு.எமிலி டிக்கின்சன் சொல்றது தான் இந்த இடத்துல பொருந்தும்‍=கடவுள் என் நண்பன்,எதிரி,துரோகி.
kkkk

About