என்னமோ நிறைய பேர் விகடன்ல வந்த கதையை பாராட்டுறப்ப பிரபஞ்சனின் ஞாபகம் வருது. நீண்ட நாட்கள் ஆகி விட்டன அவர்ட்ட பேசி. தினமும் பேசினால் தான் அன்பென்றால் சத்தியமாக எனக்கு அவர் மேல் அன்பில்லை. ஆனால் 18,19 வயதில் எனக்கு வாழ்க்கையை கற்று கொடுத்தவள் சந்தியா. சந்தியாவை மக்கள் தொலைக்காட்சியில் பெரும் தொல்லையாய் பார்த்தேன். அது விடுதலையின் இயக்கத்தில் வெளிவருவதாய் ஒரு நண்பர் சொன்னார். விடுதலை ஜெகனின் நண்பர். அப்ப அவர பார்த்திருக்கேன்.

பிரபஞ்சன் எல்லாகால கட்டத்திலும் ஒரு நல்ல நண்பராகவே எனக்கு இருந்த்திருக்கார். எல்லா நூற்களுக்கும் அவரே முன்னுரை எழுதி இருக்கார். அப்படி தான் மாலனும் இருந்தார். வாழ்க்கையின் மோசமான ஒரு சந்தில் நான் சிக்கியிருந்த போது வேலை வாங்கி கொடுத்தார். ஆனால் என்னால் அங்கே தொடர்ந்து வேலை பார்க்க முடியவில்ல.
லை. நானே சேர்த்து விட்ட ஒரு பெண்ணால் நானே வினையை இழுத்துக் கொண்டேன். அந்தப் பெண் சேலத்தில் இருந்தாள். காதல் தோல்வியால பாதிக்கப்பட்டிருந்த அவளுக்கு உதவுறதா நினைச்சிக்கிட்டு அவளை சென்னைக்கு வர சொன்னதே நான் தான். மாலன்ட்ட அவள் புகழ் பாடி வேலை வாங்கி கொடுத்தேன். அப்புற்மா நானும் அஙக வேலைக்கசேர்ந்த்தேன். அங்க இருந்த இன்னொரு பெண்ட்ட அவளுக்கு இருந்த பெர்சனல் வன்மத்தை என்ன வ‌ச்சி தீர்த்துக்க முயற்சி பண்ணினா. அது கேரளா பொண்ணு. அசருமா? எனக்கும் இந்த பாலிடிக்ஸ் அசிங்கமா இருந்துச்சு. வேலையும் எதிர்பார்த்த அளவுக்கு சுவாரஸ்யமா இல்ல.

ஒரு நாள் நானே திடும்னு திருவண்ணாமலைக்கு போய்ட்டேன். அங்க சித்திவீட்ல இருந்தப்போ மாலன் போன் போட்டார். அப்ப எனக்கு ரொம்ப உடம்பு முடியாம இருந்த நேரம். சித்தி தான் அவர்ட்ட பேசினாங்க.எனக்கு பேச யோசனையாய் இருந்துச்சு. அதை விட சங்கோஜம். எப்படி அவர்ட்ட இந்த வேலை வேணம்னு சொல்ல முடியும்? முத‌வாட்டி விமான‌த்துல‌ போற‌ வாய்ப்ப‌ அவ‌ர் தான் ஏற்ப‌டுத்திக் கொடுத்தார்.அப்ப‌ சீட் பெல்ட் மாட்ட‌ போராடிட்டிருந்த‌ எங்கிட்ட‌‍ மேலும் நிறைய‌ விமான‌ ப‌ய‌ண‌ங்க‌ள் போக‌ வாழ்த்துக்க‌ள்னு அவ‌ரிக்கேயான‌ புன்ன‌கையோட‌ சொன்னார். வேறொரு க‌ம்ப‌னிக்காக‌ அடிக்க‌டி விமான‌த்துல‌ ப‌ய‌ணிச்ச‌ப்போலாம் சீட் பெல்ட் போடுற‌ப்ப‌லாம் அவ‌ர் சொன்ன‌து குற் உண‌ர்ச்சியோட‌ ஞாப‌க‌ம் வ‌ரும்.

மெயில்ல ராஜினாமா கடிதம் அனுப்பினேன். அதற்கு பதில் வந்திருந்தது‍ யூ ஹேவ் லாஸ்ட் எ ப்ரெண்ட்னு‍. உண்மை தான். மாலன் என்னும் நண்பரை ஒரு வலிமையான காரணங்கள் ஏதுமற்று யாரோவால், உச்சரிக்கப்படாத வார்த்தையால்.. இழந்த்து விட்டேன். 41, பெருமாள்புரத்தில் நாங்க வசித்தப்போ வீட்டுக்கு வந்து நல்லா எழுதுறே.. தொடர்ந்து எழுதுனு சொன்ன மாலனை நண்பர் இல்லைனு அவரே சொன்னாக்கூட ஏத்துக்கணும்னு ஏதும் இருக்கா என்ன?
வீடென்று எதனைச் சொல்வீர்?
அது இல்லை எனது வீடு.
ஜன்னல் போல் வாசல் உண்டு.
எட்டடிக்கு சதுரம் உள்ளே
பொங்கிட மூலை ஒன்று
புணர்வது மற்றொன்றில்
நண்பர்கள் வந்தால்
நடுவிலே குந்திக் கொள்வர்
தலை மேலே கொடிகள் ஆடும்
கால்புறம் பாண்டம் முட்டும்
கவி எழுதி விட்டுச் செல்ல
கால்சட்டை மடித்து வைக்க
வாய் பிளந்து வயிற்றை எக்கிச்
சுவரோரம் சாய்ந்த பீரோ......
....................... கீழும் பூக்கள்.


- மாலன்.

About