பதிவுகள் ப்ளாக்ல போடலாம்ங்கிற உத்வேகத்தைக் கொடுத்தது பரிசல்காரன் ப்ளாக தான். அப்ப அது பத்தி நிறைய விஷயங்களில்‍ டெம்ப்லேட், அது இதுலலாம் உதவியது விஜயலக்ஷ்மண்.சரி. பிள்ளையார் சுழி போட்டாச்சு.ப்ளாக்ல என்னலாம் எழுதலாம்னோன ராஜவேல் மொக்கையா எழுதுக்கானான். அப்பதான் நிறைய பேர் வாசிப்பாங்கனான். வழக்கமான உயிரில் விழுந்த சிக்கல் அது இதுனுலாம் எழுதிடாதனு அவன் மறைமுகமா எச்சரிசசது புரிஞ்சா கூட பிறவி புத்தி போகுமா ?

கடைசிப் ப்க்கம் தொலைந்த டைரினு ஒரு ப்க்கம் எழுதிட்டு போகலாம்னு மனசத் தேத்திக்கிட்டேன்.வ்ழக்கமா பேசுறப்ப கொஞ்சம் வெளிப்படுற குசும்ப வச்சி மத்தத சமாளிச்சிக்கலாம்னு ஒரு கிராப் மனசுக்குள்ள வரைஞ்சாச்சு.

அப்புற‌மா த‌மிழ்ம‌ன‌ம்ல‌ எப்ப‌டி சேர்க்க‌னு ப‌ரிச‌ல்கார‌ன் கிருஷ்ணா உத‌வி செய்தார். த‌மிழ்வெளில‌ ம‌றுப‌டி நில‌வ‌ன் சேர்த்து விட்டார்.ந‌ண்ப‌ர்க‌ள் உடையான் ப‌டைக்கு அஞ்சான்.

க‌டைசில‌ கிருஷ்ணா போன்ல‌ சொல்ல‌ சொல்ல‌ த‌மிழ் ம‌ன‌ம் க‌ருவிப்ப‌ட்டைல‌ ‌‍பேர் ந‌ல்லாருக்கு இல்லையா?சேர்த்தாச்சு.
இப்ப‌ பாருங்க‌ . த‌மிழ் ம‌ன‌ம் பேஜ்ல‌ உங்க‌ ப‌திவு வ‌ரும். முத‌ல் 20க்குள்ள‌ முத‌ல் ப‌க்க‌த்துல‌ தெரியும். அப்புற‌மா சைடுல‌ ம‌றுமொழி தெரியும்னார். ச‌ரினு சொல்லிட்டு ராத்திரி ஒரு ப‌த்து ம‌ணிக்கு யாராச்சும்
யாராச்சும் பின்னோட்டம் போட்டிருக்காங்களானு பார்த்தேன் .குச் நஹி. சரினு ஒரு ரெண்டு மணிக்கு முழிப்பு வந்தப்போ சிஸ்டம் ஆன் பண்ணி பார்த்தேன். புள்ள உச்சா போயிட்டானு பார்க்குற மாதிரி.
அப்பவும் எதுமில்லை.

காலைலயும் பார்த்தாச்சு. இல்லை.இல்லவே இல்ல. பரிசல்காரன்ட்ட மெசேஜ் பண்ணி ‍ஒண்ணுமே வரலனேன். அழக்கூடாதுனு சொன்னார் வடிவேலு பாணில. அட‍= அழுது அழுது எங்க வீட்டு போர்வை நனைஞ்சிப் போச்சேனு சொன்னேன்.

அரசியல்ல இதெல்லாம் சகஜம்மப்பா சாமினேன்.
நீங்க எல்லாத்தையும் லைட்டா எடுத்துக்கிறீங்க. நல்ல ஸ்பிரிட்னார்.
அடிங்க. மூஞ்சில மட்டும் அடிக்காதீங்க. பர்சனாலிட்டி போயிறும்னு தான் சொல்லவும் வேண்டியிருக்கு.
இந்த பதிவுக்கு பெரும்பாலும் உதவிய வடிவேலுக்கு மானசீகமான நன்றி.
வடிவேல் சத்தியமா மறுமொழி போட மாட்டார்

13 பின்னூட்டங்கள்:

Nilavan சொன்னது…

பின்ண்ட்டம் போட்டாச்சு..

சக்ஸஸ்புல்லி டெஸ்டெடு..

சரியா ?

நிலவன்

http://eerththathil.blogspot.com

பதி சொன்னது…

//ச‌ரினு சொல்லிட்டு ராத்திரி ஒரு ப‌த்து ம‌ணிக்கு யாராச்சும் யாராச்சும் பின்னோட்டம் போட்டிருக்காங்களானு பார்த்தேன் .குச் நஹி. சரினு ஒரு ரெண்டு மணிக்கு முழிப்பு வந்தப்போ சிஸ்டம் ஆன் பண்ணி பார்த்தேன். புள்ள உச்சா போயிட்டானு பார்க்குற மாதிரி. அப்பவும் எதுமில்லை.//

ஓ... ஆனால், அதுக்கு முன்னாடி பின்னூட்டம் இடும் வசதியை இணைத்திருக்க வேண்டும் !!!!

அறிவே தெய்வம் சொன்னது…

\\ச‌ரினு சொல்லிட்டு ராத்திரி ஒரு ப‌த்து ம‌ணிக்கு யாராச்சும்
யாராச்சும் பின்னோட்டம் போட்டிருக்காங்களானு பார்த்தேன் .குச் நஹி. சரினு ஒரு ரெண்டு மணிக்கு முழிப்பு வந்தப்போ சிஸ்டம் ஆன் பண்ணி பார்த்தேன். புள்ள உச்சா போயிட்டானு பார்க்குற மாதிரி.
அப்பவும் எதுமில்லை.

காலைலயும் பார்த்தாச்சு. இல்லை.இல்லவே\\

நானும் இப்படித்தான்..
அருமையாக எழுத்தில் கொண்டுவந்துள்ளீர்கள்.

வாழ்த்துக்கள்...

தொடர்ந்து எழுதுங்கள்..

பதி சொன்னது…

பின்னூட்டங்களைப் பற்றி....

நீங்கள் உங்களுடை இந்த புதிய வலைத் தளத்தின் வார்ப்புருவை தமிழ்மணத்தில் இணைக்கவில்லை என எண்ணுகிறேன்.. அதனால், உங்கள் பதிவு சற்று நேரத்திற்கு மேல் தெரியாது. அதே சமயம் மறுமொழிகளும் திரட்டப்படாது !!!!

நிற்க.

அதே சமயம், தற்சமயம் இந்த பின்னூட்டங்களைப் பற்றி நான் வேறு ஒரு வலைப்பூவில் பதிந்ததை இங்கும் இடுகிறேன்.

//முன்பிருந்ததை விட பக்கச் சார்பான பின்னூட்டங்களும் வாக்களிப்புகளும் பெருகிவிட்டதாக நான் எண்ணுகிறேன் (இது எனது அனுமானமே, தவறாக கூட இருக்கலாம்). அதாவது , எழுதுபவரின் கருத்துகளை பார்க்காமல் யார் எழுதுகின்றனர் என்பதனைப் பொறுத்து பின்னூட்டமிடுவதும், வாக்களிப்பதும் முன்பைவிட சற்று அதிகமாகவே உள்ளதாக நான் எண்ணுகிறேன். 1st, 13th என்றெல்லாம் வரும் பின்னூட்டங்கள் எதற்கென்றே புரியவில்லை. :( (மொக்கைச் சாமிகள் தயவு செய்து மன்னிக்கவும்)//

அதனால், நீங்கள் உங்கள் எழுத்துகளை மட்டும் கவனியுங்கள்... பின்னூட்டக் கவலை வேண்டாம். :)

தமிழ் பிரியன் சொன்னது…

கவலைப்படாதீங்க..நல்லா எழுதினால் நிச்சயம் கமெண்ட் வரும். இல்லைன்னா எல்லார் பதிவுக்கும் போய் கமெண்ட் போடுங்க..இவை தான் வழிகள்!

தமிழ் பிரியன் சொன்னது…

வாழ்த்துக்கள்!

ஆயில்யன் சொன்னது…

//யாராச்சும் பின்னோட்டம் போட்டிருக்காங்களானு பார்த்தேன் .குச் நஹி. சரினு ஒரு ரெண்டு மணிக்கு முழிப்பு வந்தப்போ சிஸ்டம் ஆன் பண்ணி பார்த்தேன். புள்ள உச்சா போயிட்டானு பார்க்குற மாதிரி.
அப்பவும் எதுமில்லை.
//
இந்த ஆர்வம் !

இந்த ஒரு ஆர்வம் மட்டும் இருந்தாலே.போதும்...!

இனி தைரியமா அடிச்சு ஆட ஆரம்பிங்க....!

:))))

வாழ்த்துக்களுடன்...!

Pulambal Ponnusami சொன்னது…

"இனி தைரியமா அடிச்சு ஆட ஆரம்பிங்க....!" - அப்படின்னு ஆயில்யன் எழுதியிருக்கார், ஆனா அடிச்சா திருப்பில வருது - நான் என் வலைப்பதிவ பத்தி பேசிட்டு இருக்கேங்க.

நட்புடன் ஜமால் சொன்னது…

டெம்ப்ளேட் நல்லாயிருக்கு.

எழுத்துகளும்தான்

தமிழ்பிரியன் அண்ணன் சொன்னத முயற்சி செய்யுங்க

துளசி கோபால் சொன்னது…

பொட்டியே வைக்காமல் போடு போடுன்னா எங்கே கொண்டு போய்ப் போடுவது?


இப்பப் பொட்டியும் வந்துருச்சு, பின்னூட்டமும் போட்டாச்சு:-)

பதிவில்
'புள்ள உச்சா......'

உதாரணம் பிரமாதம்:-)))))

செல்வேந்திரன் சொன்னது…

தமயந்தி, உங்களது முந்தைய பதிவுகள் ஒன்றிரண்டைப் படித்துவிட்டு பின்னூட்டமிட தேடியபோது கமெண்ட் ஆப்ஷனே இல்லாமல் இருந்தது கண்டேன்.

இப்போதுதான் சேர்த்திருக்கிறீர்களா?

Nilavan சொன்னது…

ஆஹா...

பின்னூட்டம் வந்து குவியுதே ?!

லதானந்த் சொன்னது…

24 மணி நேரமும் மத்த பதிவுகளுக்குப் பின்னூட்டம் போட்டுகிட்டே இருங்க. யார் பின்புறம் தெரிஞ்சாலும் சடார்னு சொறிஞ்சிடுங்க. போன் நெம்பர் வாங்கித் தொடர்ந்து பேசிகிட்டே இருங்க. ”சூப்பர், கலக்கல், எப்படிய்யா இதெல்லாம்? அட்டகாசம், எங்கியோ போயிட்டீங்க, உங்க எச்சில் மணக்குது, பாதம் வெச்ச மண்ணத் தொட்டுப் பல்லு வெளக்கலாம்” இது மாதிரி வார்த்தைகளை அடிக்கடி எழுதுங்க. அப்புரம் பாருங்க பின்னுக்கு நெம்ப ஊட்டம் கெடைக்கும்

About